திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது புகழ்பெற்ற பழமொழி ஆகும்.
அப்படியான திருமண வாழ்க்கை ஒவ்வொருவரின் ராசியின் படி கூட எப்படி அமையும் என்பதை கணிக்க முடியும்.
மேஷம்
சுதந்திர மனபான்மை கொண்ட மேஷ ராசிகாரர்கள், எதிர்பாராத காதல் ஆச்சரியங்களை தங்கள் துணைக்கு தந்து அசத்துவார்கள்.
இந்த தம்பதிகள் போட்டி மனபான்மையை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
அன்யோன்ய தம்பதிகளாக இந்த ராசிகாரர்கள் இருப்பார்கள். சொகுசான வாழ்க்கையை வாழ இவர்கள் விரும்புவார்கள்.
மிதுனம்
இந்த ராசியை கொண்டவர்கள் தங்கள் துணையுடன் புதிய விடயத்தை மேற்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். தம்பதிகள் ஒன்றாக நேரம் செலவிட வேண்டியது அவசியமாகும்.
கடகம்
இந்த ராசிகாரர்களுக்கு வீடே சொர்கமாகும். கணவன் மனைவிகள் தங்களுக்குள் செல்ல பெயரை வைத்து அழைப்பார்கள். இருவரும் இணைந்து சமைக்க அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.
சிம்மம்
ஒளிவு மறைவு இல்லாமல் விடயங்களை இந்த ராசி தம்பதிகள் ஷேர் செய்து கொள்வார்கள். கணவன் மனைவிக்குள் காதல் அதிகமாக இருக்கும்.
கன்னி
இந்த ராசிகார்கள் சின்ன விடயத்துக்கு கூட அதிக அக்கறை எடுத்து கொள்வார்கள். ஒருவருக்கு ஒருவர் தம்பதிகள் ஊக்கமளிப்பார்கள்.
துலாம்
கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனாலும் ஒருவரின் தனிதன்மையை விட்டு கொடுக்காமல் இருப்பது நல்லது.
விருச்சிகம்
திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த தம்பதிகளின் காதல் குறையாது. விருச்சிக ராசிகார்கள் கட்டுபாட்டின் அடையாளமாகவே திகழ்வார்கள்.
தனுசு
இந்த தம்பதிகளுக்கு புதிய விடயங்களை பற்றி தெரிந்து கொள்வதென்றால் அலாதி பிரியம். மனதில் இருப்பதை பேசும் ஆற்றல் தனுசு ராசிக்கு உண்டு.
மகரம்
மகர ராசிகார்கள் பாரம்பரியத்தை பேணி காக்கும் குணம் கொண்டவர்கள் ஆவர். விடுமுறை கொண்டாட்டத்தில் கூட இவர்கள் பாரம்பரியத்தை பின்பற்றுவார்கள்.
கும்பம்
தம்பதிகள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் போல தான் இருப்பார்கள். சமூகத்துடன் அதிகம் நெருங்கும் மனப்பான்மை இயற்கையிலேயே இருக்கும்.
மீனம்
படைப்பாற்றல் மற்றும் கற்பனை திறன் கொண்டவர்கள் மீன ராசிகாரர்கள். கணவன் மனைவி அதிகம் பிரிந்து இருக்காமல் இருப்பது நல்லது.