கிரக நிலைகளைப் பற்றி சொல்லப்போனால் செப்டம்பர் மாதம் அவற்றிற்கு சிறப்பு வாய்ந்தது. செப்டம்பர் மாதத்தில், மூன்று முக்கிய கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றும்.
அதாவது தனது இடத்தை மாற்றும். இதன்போது எப்போது, எந்த கிரகம் எந்த ராசியில் பயணிக்கும் என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.கோள்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையை பாதிக்கிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்கிறது. இதைப்பற்றிய முழுமையான விஷயத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரக மாற்றம்
சூரியன் தனது ராசியை சுமார் ஒரு மாதத்தில் மாற்றிக் கொள்கிறார். புதன் சுமார் 21 நாட்கள் எந்த ராசியிலும் தங்குகிறார். சுக்கிரன் 26 நாட்களுக்குப் பிறகு தனது ராசியை மாற்றிக் கொள்கிறார்.
2024 செப்டம்பர் மாதம் கிரகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பானதாக இருக்கப்போகிறது. இந்த மாதத்தில் கன்னி ராசியில் கிரகங்களின் சங்கமம் நடைபெறவுள்ளது.
இதன்போது சூரியன் தற்போது தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் அமர்ந்து செப்டம்பர் 16, 2024 திங்கட்கிழமை அன்று கன்னி ராசிக்கு இடம் பெயரபோகிறார். இதன்போது அக்டோபர் 17-ம் தேதி சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
இதன்படி மேஷ ராசியில் இருந்து மீனத்திற்கு சூரிய பெயர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிபார்க்கப்படுகிறது. புதன் பகவான் கிரகங்களின் இளவரசன் என போற்றப்படுபவர்.
இவர் தற்போது கடகத்தில் புதனின் பிற்போக்கு நிலையில் உள்ளார். செப்டம்பர் 4 ஆம் தேதி புதன் சிம்ம ராசியில் நுழைந்ததற்குப் பிறகு, செப்டம்பர் மாதத்தில் புதன் இரண்டாவது முறையாக தனது ராசியை மாற்றுவார். செப்டம்பர் 23 ஆம் தேதி புதன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.
இப்படி புதனின் இரட்டை பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதிக்கும். இதையடுத்து அக்டோபர் 10-ம் தேதி புதன் துலாம் ராசியில் நுழைகிறார். இதுவே புதன் கிரகத்தின் பெயர்ச்சியாக உள்ளது.
செல்வத்தின் காரணியான என அழைக்கப்படுபவர் சுக்கிரன் இந்த நேரத்தில் கன்னி ராசியில் இவர் சஞ்சரிக்கிறார். இதன்போது செப்டம்பர் 18 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசியில் நுழைவார்.
துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சரித்த பிறகு, 12 ராசிகளுக்கும் சுபமான மற்றும் அசுபமான பலன்களை இது வழங்கும். இதற்கு பின்னர் அக்டோபர் 13 ஆம் தேதி மீண்டும் விருச்சிக ராசிக்கு சுக்கிரன் சஞ்சரிப்பார். இதற்கு ராசி பலன்களை நாம் இந்த பெயர்ச்சியின் பின்னர் அறிய முடியும்.