சனிபகவான் என்றால் பயந்து ஒதுங்குவார்கள். சனிபகவான் ஒரு ராசியில் குறைந்தபட்சம் இரண்டரை ஆண்டுகள் முதல் 3 ஆண்டு காலங்கள் சஞ்சரிப்பதால் நன்மையாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் சரி அதன் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது.
சனி என்பது நேர்மை, உண்மை, கடின உழைப்பு ஆகியவற்றைக் குறிக்கும் கிரகம். ஊழியர்களை ஏமாற்றக் கூடாது. ஒரு விஷயத்தை செய்து முடிக்க வேண்டும் என்று உறுதி மேற்கொண்டு அதை நிறைவேற்றுவதை நோக்கி செயல்பட வேண்டும்.
இந் நிலையில் சனிபகவான் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும் மூன்று ராசிகளுக்கு நல்ல உயர்வை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
இந்த நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வருமானத்தில் உயர்வை கொடுக்கும்.
நிதி நிலமைகளில் ஒரு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
பணவரவில் எந்த முன்னேற்றமம் கிடைக்காது.
அதிஷ்டம் உங்களை தேடி வந்து கைகொடுக்கும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் புதிய முதலீடுகளால் சிறந்த முன்னேற்றத்த பெறலாம்.
தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
கும்ப ராசி
இந்த நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமான விளைவை பெற்று தரும்.புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு தொந்தரவாக இருக்க மாட்டார்கள்.
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.
உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
ரிஷப ராசி
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
உயர் அலுவலர்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்றுத் தருவார்கள்.
சக ஊழியர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைது நிம்மதி வரும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.