எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்” என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட திகதிகளில் பிறந்த பெண்கள் வணிகத்தில் சிறந்து விளங்குவார்கள். அத்துடன்அவர்களை சார்ந்திருப்பவர்களையும் நன்றாக பார்த்து கொள்வார்கள். அப்படியான பெண்கள் என்னென்ன திகதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. பிறந்த தேதி 3
12 மாதங்களில் 3 ஆம் தேதி பிறந்த பெண்கள் இயற்கையில் அமைதியானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குள் மென்மையான குணம் இருந்து கொண்டே இருக்கும். இந்த திகதியில் பிறந்த பெண் குழந்தைகள் அதிர்ஷ்டத்தை தந்தைக்கு அள்ளிக் கொடுப்பார்கள். பிறந்ததிலிருந்து, வீட்டின் தொல்லைகள் விலக போராடுவார்கள். லட்சுமி தேவியின் அருள் எப்போதும் இந்த எண்ணில் பிறந்த பெண்களுக்கு இருக்கும். இதனால் இவர்கள் இருக்கும் வீட்டில் செல்வம், மகிழ்ச்சி பெருகும்.
2. பிறந்த தேதி 12
12 மாதங்களில் 12-ம் தேதி பிறந்த பெண் குழந்தைகளிடமும் லட்சுமி தேவி கருணை காட்டுவாள் என்று கூறப்படுகின்றது. தொழிலில் உயர்ந்த நிலையை அடைவார்கள். பெற்றோரின் பெயரை எப்போதும் பிரகாசமாக்குகிறார்கள். இவர்கள் வீட்டில் பிறந்த பிறகு பணப் பிரச்சினைகள் வருவது குறைவாகவே இருக்கும். செல்வம் மற்றும் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும். வீட்டிற்கு வந்த பிரச்சினை வாசலோடு சென்று விடும்.
3. பிறந்த தேதி 21
எந்த மாதத்திலும் 21 ஆம் தேதி பிறந்த பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது பெரிய மரியாதை இருக்கும். இந்த திகதியில் பிறந்த பெண்களின் கூட்டெண் 3 ஆக இருக்கும். இவர்கள் நுழையும் வீடு செல்வ செழிப்புடன் இருக்கும். இவர்கள் புத்திசாலியாகவும் கூர்மையான மனம் கொண்டவராகவும் இருப்பார்கள். தந்தையின் கனவுகள் அனைத்தையும் வாழ்க்கையில் நனவாக்க நினைப்பார்கள்.