Loading...
தமிழக மீனவர் நேற்று இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் மீது தாங்கள் துப்பாக்கி சூட்டினை நடத்தவில்லை என இலங்கை கடற்படை பேச்சாளர் லுத்தினன் கொமான்டர் சமிந்த வலகுலுகே மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தமிழக 22 வயதுடைய மீனவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
Loading...
அதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடையம் தற்போது தமிழகம் எங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...