எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்” என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் தனிமை விரும்பிகளாக இருப்பார்களாம். இவர்களை பொருத்தவரையில் தனிமையில் இருப்பது தான் சந்தோஷம் என அவர்கள் நினைத்து கொண்டிருப்பார்கள். அப்படியானவர்கள் எந்த தேதியில் பிறந்திருப்பார்கள் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எண் 4
12 மாதங்களில் 4, 13, 22 அல்லது 31 ஆம் திகதி பிறந்தவர்கள் ரகசியமாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும் வாழ்வார்கள். இதனை அவர்களும் விரும்பி ஏற்றுக் கொள்வார்கள்.
அவர்களின் வாழ்க்கையில் நிறைய உறவுகள் இருந்தும் அதில் இல்லாத சந்தோஷத்தை அவர்கள் தனிமையில் தேட முயற்சிப்பார்கள்.
இவர்களுக்குள் சில விடயங்களில் அவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஏனெனின் அதனை மறைத்தே வைக்க எண்ணுவார்கள். தனியுரிமை என்பது அவர்களின் இயல்பான குணமாகும்.
எண் 4 பிறந்தவர்கள் வெளிப்படையாக எதையும் கூறமாட்டார்கள். இவர்களின் உணர்வுகள் மற்றும் எண்ணங்களை தெரிந்து கொள்வது புதிராகவே இருக்கும்.
யாரையும் அவ்வளவு எளிதில் நம்பமாட்டார்கள். எவ்வளவு பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து விடுவார்கள்.
ஒருவருடன் நல்லுறவு மேம்படுத்திய பின்னர் அவர் எண் 4 ல் பிறந்த நபருக்கு தேவைப்பட்டால் மாத்திரமே அவர்களிடம் தங்களை பற்றிய விடயங்களை கூட பகிர்வார்கள்.
தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள், சிரமங்கள் என்பவற்றை மற்றவர்களுடன் கூறுவது பலவீனமான செயலாக பார்க்கிறார்கள்.
பெரும்பாலும் இந்த தேதியில் பிறந்தவர்கள் தங்கள் ரகசியங்களை துணையிடம் மட்டுமே பகிர வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள்.
தனிமை விரும்பிகளாக இருப்பதால் எப்போதும் சுதந்திரமானவர்களாக திகழ்வார்கள். அத்துடன் அவர்களின் சொந்த முடிவுகளை அவர்கள் மட்டுமே எடுப்பார்களாம்.
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் விஷயங்களை உணரும் திறன் அதிகமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் மிகவும் பகுத்தாய்வுடையவர்களாகவும் இருப்பார்கள்.
பேசுவதற்கு முன் மட்டுமல்ல எந்த முடிவையும் அல்லது செயலையும் எடுப்பதற்கு முன் நன்கு யோசிப்பார்கள்.