நாம் சாலையில் நடந்து செல்லும்போது நாய் வந்து திடீரென மோப்பம் பிடிப்பது எல்லோருக்கும் தெரியும். அதிக தெரு நாய்கள் இருக்கும் இடத்தில் இப்படியான அனுபவங்களை சிலர் அடிக்கடி எதிர்கொள்வார்கள்.
சிலர் நாய் கடிக்க வருவதாக நினைத்து பயப்படுவார்கள். ஆனால் நாய் அருகில் ஓடி வரும்போது அமைதியாக இருந்தால் அது மோப்பம் பிடித்துவிட்டு செல்லும்.
நீங்கள் விரட்டி விட்டால் அது கோபம் கொண்டு உங்களை கடிக்கும். அந்த வகையில் உங்களை நாய் மோப்பம் பிடிப்பதற்கான காரணத்தை இந்த பதில் பார்க்கலாம்.
நாய் மோப்பம் பிடித்தல்
நாய் நாம் நடந்து செல்லும் போது மோப்பம் பிடிப்பதற்கான காரத்தை யாரும் சிந்தித்து இருக்க மாட்டோம்.மனிதர்களை விட அதிக மோப்ப சக்தியை கொண்டிருக்கும் நாய் மூக்கில் அதிக வாசனை செல்கள் இருக்கின்றன.
மனிதர்களாகிய நம்மிடம் 6 மில்லியன் வாசனை செல்கள் மூக்கில் இருக்கிறது என்றால் நாயிடம் சுமார் 100 முதல் 300 மில்லியன் வாசனை செல்கள் இருக்கின்றன. அதனால், மனிதர்களை பார்த்ததும் பல காரணங்களுக்காக நாய் அருகில் வந்து மோப்பம் பிடிக்கிறது.
நாய்கள் அவை வசிக்கும் இடத்தில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்வதற்காக மனிதர்களை மோப்பம் பிடிக்கும்.
இதன் காரணம் நாய்ளுக்கு பேச முடியாது என்பதால் மோப்ப சக்தியை வைத்து தன்னுடன் வாழ்ந்த மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும்.
இதற்காகவே நாய்களிடம் பெரோமோன்கள் எனும் ஹார்மோன்கள் இருக்கின்றன.
இந்த ஹார்மோனை வைத்து ஒருவரின் அடையாளம், உணர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை நாய்கள் தெரிந்து கொள்ளும்.
மனிதர்களை மோப்பம் பிடிப்பது அவர்களை அடையாளம் கண்டுகொள்ள மட்டுமல்ல தனது நன்றியை காட்டுவதற்கும் தான்.
ஒருவரின் மீதான அன்பை வெளிக்காட்டவும் நாய்கள் முகர்ந்து பார்க்கும்.
நாய்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஒரு விலங்காகும்.
இது ஒவ்வொரு முறையும் மனிதர்கள் சென்று வரும்போதெல்லாம் அவர்களை ஆராய்ந்து கொள்ளும்.
இதன்போது மனிதர்களிடம் இருந்து வெளிப்படும் வாசனையை முகர்ந்து கொள்ளும்.
நாய்கள் சோர்வாக இருக்கும்போது தங்களை சுறுசுறுப்பாக்கிக்கொள்ள மனிதர்களிடம் வந்து வேகமாக மோப்பம் பிடிக்கும் என கூற்படுகின்றது.
இப்படியான அணுகுமுறை அதற்கு சாந்தத்தை கொடுக்கும்.
இதற்காக தான் ராணுவம் மற்றும் போலீஸில் இருக்கும் நாய்களுக்கு பிரத்யேகமாக மோப்ப பயிற்சி கொடுக்கப்படும்.
இது குற்றவாளிகளை அடையாளம் காணவும், ஆபத்தான பொருட்கள் இருக்கும் இடத்தை கண்டறியவும் உதவும்.