இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது.
அந்த வகையில் இந்த வருடத்தின் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து விறாயகருக்கு பிடித்த பிரசாதங்களை படைத்து வழிப்படுவது வழக்கம்.
விநாயகர் கடவுள்களுக்கெள்ளலம் கடவுளாக திகளும் மாகாதேவர் எனப்படும் சிவபெருமானின் மகன் என புராணங்கள் குறிப்பிடுகின்றது. இந்த நாள் விநாயகரின் பிறந்த தினம் ஆகும்.
சாஸ்திரங்களின் பிரகாரம் இந்த தினத்தில் விநாயகரை வழிப்பட்டால் வாழ்வில் இருந்த சகல பிரச்சினைகளும் நீங்கி செல்வ செழிப்பு அதிகதிக்கும் என்பது ஐதீகம்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் விநாயக சதுர்த்தி 2 ராயினருக்கு மாபெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. விநாயகரின் பரிபூரண அருளால் இந்த இரண்டு ராசியினரின் வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகின்றது. அப்ப அபரிமிதமான பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுன ராசி
அறிவு மற்றும் புத்திகூர்மையின் கிரகமான புதன் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான் மிதுன ராசியினர் இவர்களின் புத்திசாதூர்யத்தால் எதையும் சாதிக்கும் திறனை இவர்கள் கொண்டிருப்பார்கள்.
மிதுன ராசியின் தெய்வமாக விநாயகர் இருப்பதால் இந்த விநாயகர் சதுர்த்தியின் பின்னர் இவர்கள் தொழில் ரீதியில் அபரிமிதமான வளர்ச்சியடையப்போகின்றார்கள். வியாபாரதடதில் ஈடுப்படுபவர்கள் உச்சகட்ட பலனை அனுபவிப்பார்கள்.
மிதுன ராசியினரின் கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் ,விநாயகரின் பரிபூரணமான ஆசீர்வாதத்தால் இவர்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும். பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
கன்னி ராசி
புத்திகூர்மையை வழங்கும் புதன் பகவான் கன்னி ராசியில் உச்சம் பெற்றிருப்பதன் காரணமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியடைவார்கள்.
புதன் பகவான் கன்னி ராசியின் அதிபதியாக இருக்கும் அதே நேரத்தில் விநாயகர் கன்னி ராசியினரின் அபிமான கடவுளாகவும் இருப்பதால் இந்த விநாயகர் சதுர்த்தி கன்னி ராசியினருக்கு பல வழிகளிலும் சாதக பலன்களை கொடுக்கும்.
விநாயக சதுர்த்திக்கு முன்னர் சந்திரன் தனது ராசியை மாற்றி துலாம் ராசிக்கு இடபெயர்ச்சி அடைவதால் கன்னி ராசியினருக்கு பல்வேறு வகையிலும் சாதக பலன்களை கொடுக்கும்.
விநாயக சதுர்த்தியின் பின்னர் நிதி ரீதியில் பாரிய வளர்ச்சி ஏற்படப்போகின்றது. வருமானம் இதுவரையில் இல்லாத அளவுக்கு முன்னேற்றத்தின் உச்சத்தை தொடப்போகின்றது.