ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் விசேட குணங்கள் என்பவற்றில் தாக்கம் செலுத்துவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
இந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களின் மனநிலை மற்றும் உணர்வுகள் குறித்து கொஞ்சமும் கவலைப்படாதவர்களாகவும் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது குறித்து மாத்திரமே சிந்திப்பவராகவும் இருப்பார்கள்.
தங்களின் காரியத்தை சாதித்தக்கொள்ள மற்றவர்களின் முதுகில் குத்தவும் தயாராக இருப்பார்கள். அப்படி சுயநலத்தின் உச்சத்தில் இருக்கும் ராயினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் மிகவும் உறுதியான மனநிலை கொண்டவர்களானக இருப்பார்கள். இவர்கள் தங்களின் செயல்களினால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து அக்கறையற்றவர்களாக இருப்பார்கள். இதன் விளைவாக இவர்களின் அன்புக்குரியவர்கள் பாதிக்கப்படலாம்.
சாகச எண்ணங்கள் நிறைந்த இவர்கள் எப்போதும் தங்களின் ஆசைகளுக்கு மாத்திரமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் மற்றவர்களுக்கு துரோகம் செய்யவும் தயங்க மாட்டார்கள். இவர்களுடன் நெருங்கி பழகும் போது சற்று அவதானமாகவே இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறப்பெடுத்தவர்கள் இரட்டை இயல்புக்காக பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களை புரிந்துக்கொள்வது மிகவும் சவாலான விடயமாக இருக்கும்.
இவர்களுக்கு காந்தம் போல் மற்றவர்களை ஈர்க்கும் பார்வையும் வசீகரமான தோற்றமும் அமைந்திருக்கும். ஆனால் இவர்களின் உள்ளுணர்வுகள் காரியம் சாதிக்கும் தன்மையில் இருக்கும்.வெளிப்படைய இருக்க மாட்டார்டகள்.
இவர்கள் மற்றவர்களுக்காக தங்களின் சந்தோஷத்தை தியாகம் செய்வதற்கு ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். சுயநலன்களுக்காக துரேகம் செய்வது இவர்களை பொருத்தவரையில் மிகவும் சாதாரண விடயமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே சுதந்திர உணர்வு சற்று அதிகமாக இருக்கும். இவர்களின் சுதந்திரத்தை யாருக்காகவும் எதற்காகவும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
இவர்களின் சந்தோஷத்துக்கு அச்சுறுத்தல் என உணர்ந்தால் யாருக்கும் துரோகியாக மாற தயாராக இருப்பார்கள். சுயநலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களிடம் விட்டுக்கொடுக்கும் தன்மை மற்றும் சகிப்பு தன்மை ஆகியவற்றை ஒருபோதும் எதிர்ப்பார்க்கவே முடியாது