நவம்பர் மாதம் சனி வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான்.
இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
இதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். இது அனைத்து விதமான செயல்பாடுகளிலும் 12 ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கும்பம்
கும்ப ராசியில் முதல் வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார்.
இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
பணத்தை அதிகமாக சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை கிடைக்காத மதிப்பு மற்றும் மரியாதை மற்றவர்களிடத்தில் அதிகரிக்கும்.
சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களின் உறவுகள் உங்களுக்கு கிடைக்கும்.
நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். திருமண யோகத்தை சனி அள்ளி தருவதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.
ரிஷபம்
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார்.
இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் கூடியளவு முன்னேற்றம் இருக்கும்.
புத்திசாலித்தனத்தால் இலக்குகளை எளிதாக வெல்ல முடியும்.
இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் இந்த பிரச்சனைகளால் குறையும்.
நவம்பர் மாதம் முதல் சமூக வாழ்க்கை இன்பமாக அமையும்.
வருமானத்தில் திருப்தி அடையும் அளவில் லாபம் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
நவம்பர் மாதம் முதல் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கின்றது.
மிதுனம்
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் வக்கிரம் நிவர்த்தி அடைய உள்ளார்.
இதனால் உங்களுக்கு நவம்பர் மாதம் முதல் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
உங்களது வேலைகளை நீங்களே செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் ஆரோக்கியம் பணம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சனி இல்லாமல் செய்ய போகிறார்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன் இதனால் பல ஆசைகள் நிறைவேறும்.