எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்” என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதியில் பிறந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ராஜாவாக இருப்பார்கள் என சொல்லப்படுகின்றது. அப்படியானவர்கள் என்ன தேதியில் பிறந்திருப்பார்கள்? அவர்களின் வேறு செயற்பாடுகள் என்ன? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எண் 1
1. 12 மாதங்களில் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டெண் 1 ஆக இருக்கும். இவர்களிடம் வலுவான தனித்துவ உணர்வு, தலைமைத்துவ திறன்கள், சாதனைக்கான ஆசை போன்ற பண்புகள் இருக்கும்.
2. வணிக முயற்சிகளில் எப்போதும் இவர்களுக்கு வெற்றி இருக்கும். எண் 1 ல் பிறந்தவர்கள் ஒரு விஷயத்தை தொடங்குவதற்கும், முடிப்பதற்கும் ஏற்ற உறுதியான எண்ணத்தை கொண்டிருப்பார்கள். நினைக்கும் காரியங்களை சாதிக்கும் குணம் இவர்களிடம் இருக்கும்.
3. பிரச்சனைகளை இவர்களிடம் கொடுத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தீர்த்து வைப்பார்கள். அத்துடன் வணிகம், மேலாண்மை, அரசியல், சுயதொழில் உட்பட அனைத்திலும் வெற்றி பெற முயற்சி செய்வார்கள். தங்களின் சுதந்திரத்திற்காக போராடுவார்கள். இலக்குகளை தொடர ஊக்குவிக்கும் துணையை தான் தேர்வு செய்வார்கள்.
4. இந்த தேதியில் பிறந்தவர்கள் உற்சாகமாக, திடமாக செயல்பட்டாலும் சில நேரங்களில் மேலாதிக்கமாகவும், சுயநலமாகவும் நடந்து கொள்வார்கள். இதனால் உறவுகளில் விரிசல் ஏற்படும்.
5. இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சாதனைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிகம் சிரமம் கொண்ட வாழ்க்கையை வாழ்வார்கள். தனிப்பட்ட குறிக்கோள்களுக்கும், உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.