குரு பகவான் தற்போது மிருகசீரிஷம் நட்சத்திர பயணம் செய்து வருகிறார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றது.
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றம் செய்யக் கூடியவர். குருபகவான் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைந்தார்.
வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் குருபகவான் பயணம் செய்வார். குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர பயணம் எந்த ராசிகளுக்கு பலனை எப்படி தரப்போகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
மேஷம்
குரு பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை குவிக்கப்போகிறது.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
ஏதாவது புதிதாக செய்தால் அதில் வெற்றியை காண்பீர்கள்.
வெளிப்பயணங்களுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் வருவதால் தொழிலில் முன்னேற்றம் வரும்.
வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் வரும்.
நிதி நிலமையில் பெருமைப்படும் அளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைத்து நிறைய பணம் சம்பாதிப்பீர்கள்.
கடகம்
குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரப்போகின்றது.
வேலை செய்யும் இடத்தில் சிறப்பான நினைவுகள் அமையும்.
இந்த கால கட்டத்தில் முன்னேற்றத்தின் பாதைக்கதவு எப்போதும் உங்களுக்கு திறந்தே இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தில் போட்டியுடன் கூடிய லாபம் கிடைக்கும்.
இதுவரை உடலில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லாமல் போய் இப்போது நல்லவை தேடி வரும்.
விருட்சிகம்
குருபகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றப் போகின்றது.
புதிய உறவுகள் கிடைக்கும் வாய்ப்பு இந்த நேரத்தில் அதிகமாக இருக்கிறது.
பழைய நண்பர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
வேலை இல்லை என்ற கவலை போய் நல்ல வேலை உங்களை தேடி வரும்.
நிதி நிலைமையில் நன்மைகள் வழக்கத்தைவிட முன்னேற்றம் இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பண வரவில் இருந்த எந்த குறையும் இருக்காது.