பொதுவாக இந்து சமய கருத்துக்களின் அடிப்படையிலும் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரமும் அதிகாலை 3 முதல் 4 மணிவரையிலான நேரம் பிரம்மமுகூர்த்த நேரம் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த நேரத்தில் குறிப்பிட்ட சிலருக்கு விதித்திரமான வகையில் திகிலூட்டும் கனவுகள் வருவதுன்டு இன்னும் சிலர் எந்த காரணமும் இன்றி இந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் விழித்துக்கொள்கின்றனர்.
அப்படி அதிகாலை நேரத்தில் வருகின்ற கனவுகள் பலிக்குமா? ஏன் இந்த நேரத்தில் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படுகின்றது என்பது குறித்த விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரபஞ்சம் உணர்த்துவது என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் அதிகாலையில் விழிப்பு வந்தால் பிரபஞ்சத்தின் ஆற்றல் உங்களுள் செயற்பட ஆரம்பித்துவிட்டது என்பதையே உணர்த்துகின்றது.
இந்த நேரத்தில் படைத்தல் நிகழும் நேரம் என சாஸ்திரங்களில் சிறப்பித்து கூறப்படுகின்றது. இந்த நேரத்தில் மனதில் நிஷனைக்கும் விடயங்கள் அனைத்தும் நிச்சயம் செயல் வடிவம் பொறும் என்பது ஐதீகம்.
இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் ஆற்றல் நிலை வீரியத்துடன் செயற்படுவதால் பிரம்மமுகூர்த்த நேரத்தில் ஆரம்பிக்கும் அனைத்து விடயங்களும் நிலையான வெற்றியை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
இந்த காலவரையில் அதிக நேர்மறை ஆற்றல் பூமியில் செயற்படுகின்றது. இந்த நேரத்தில் நீங்கள் விழித்துவிட்டால், அந்த நேரத்தில் முக்கியமான விடயங்கள் குறித்து சிந்திபது அல்லது அதற்கான திட்டங்களை வகுப்பது போன்ற விடயங்களில் ஈடுப்படலாம். இது உங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல துணைப்புரியும்.
இந்த நேரத்தில் வருகின்ற கனவுகள் பெரும்பாலும் நல்ல அறிகுறிகளை கொடுப்பதாகவே இருக்கும். அப்படியான கனவுகள் பலிக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நேரத்தில் விழிப்பு நிலை வந்துவிட்டால் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது பிரபஞ்ச ஆற்றல் உங்களுள் செய்ற்படுவதன் காரணமாகவே நிகழ்கின்றது.
இந்த நேரத்தை நல்ல விடயங்களுக்காக பயன்டுத்த வேண்டும் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் இந்த நேரத்தில் கடவுள் வழிபாடு செய்வது உங்களுக்கு பல மடங்கான நன்மைகளை கொடுக்கும்.
இந்த நேரத்தில் விழிப்பு நிலை வருகின்றது என்றாலே உங்கள் வாழ்க்கை வெற்றியை நோக்கி செல்கின்றது என்று அர்தம்.