நாம் உண்ணக்கூடிய உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்ககூடிய காய்கறிகளில் ‘ முட்டைக்கோசு’ முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் இதை உணவில் அளவோடு பயன்படுத்தி வர நமக்கு கிடைக்கும் பயன்களோ ஏராளம்.
முட்டைக்கோஸின் பயன்கள் :
இதன் குணம் குளிர்ச்சியாகும், ஆதலால் முட்டைக்கோசானது சிறுநீரை பெருக்கி வெளியேற்றும் தன்மையுடையது. ஜலதோஷத்தினால் துன்பப்படுபவர்கள் முட்டைக்கோஸை நன்றாக வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை இதை பயன்படுத்தினால் அத்தொல்லையிலிருந்து வெளியேறலாம். உடலை ஆரோக்கியத்துடன் வைக்க முட்டைக்கோஸ் உதவுகிறது. முட்டைக்கோஸின் சாறு உடல் பருமனைக் குறைக்கும்.
முகப்பருக்கள் இருப்பவர்கள் வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் பருக்கள் நீங்கி முகம் பளபளப்பாகும். அஜீரணக் கோளாறுகளால் அவதிபடுபவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் உடலும், முகமும் இளமை தோற்றத்துடன் இருக்கும். சொறி, சிரங்கு இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
முட்டைக்கோஸில் உள்ள விட்டமின் சி உடம்பிற்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் ’பிரீ-ரேடிக்களை’ சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
விட்டமின் B-5, விட்டமின் B-6, விட்டமின் B-1 போன்ற அத்தியாவசிய விட்டமின்கள், உடம்பின் உணர்வுகளுக்கும் இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை புரிகின்றது.
பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற தாது உப்புகள் முட்டைக்கோஸில் இருப்பதால், இவை இதய துடிப்பு, உடற்செல்கள் மற்றும் ரத்த அழுத்தத்தை சீரமைக்கிறது. மேலும் சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.
விட்டமின்-K நிறைய அளவில் இருப்பதால் அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
முட்டைக்கோஸில் தயோசயனேட், கார்பினால், லூடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற இரசாயன மூலக்கூறுகள் இருப்பதால், இவை மார்பகம், தொண்டை, குடற்புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது.
முட்டைக்கோஸில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இதை தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நீக்கப்பட்டு உடலின் எடை குறைய உதவுகிறது.
முட்டைக்கோஸை பொடிப்பொடியாக அரிந்து தயிர், வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கம் ஏற்படும்.
முட்டைக்கோஸில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் இருப்பதால் இவை கல்லீரலில் உள்ள கழிவுகளை அகற்றி அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
முட்டைக்கோஸில் போலிக் அமிலம் ஏராளமாக இருப்பதால் இது ரத்த சோகையை குணப்படுத்தி ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.