பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், செவ்வாய் பெயர்ச்சியால் நீசபங்க ராஜயோகம் உருவாகும். இதனால் குறிப்பிட்ட ராசியினருக்கு லாபம் மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
இந்த பெயர்ச்சியால் தற்போது பணக்கஷ்டத்தில் இருந்து கூடிய விரைவில் பணம், வசதி, சொந்தங்களுடன் இணையப் போகும் ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. கடகம்
கடகத்தில் செவ்வாய் நுழைவது கடக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
நீசபங்க யோகத்தால் இவர்களிடம் மன உறுதி அதிகமாகவே இருக்கும்.
வாழ்க்கையின் இலக்கை அடைய தீவிரமாக முயற்சிப்பார்கள்.
இவர்களின் உழைப்பில் அதிகமான பணத்தை சம்பாரிப்பார்கள்.
இவர்களின் தீவிர முயற்சியால் இலக்கு கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும்.
திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
2.மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். இதனால் இவர்கள் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களாக காணப்படுவர்.
இவர்கள் சாதிக்க நினைக்கும் துறையில் பல முயற்சிகள் செய்திருப்பார்கள்.
இதற்கான பலனாக ஆசை கூடிய விரைவில் நிறைவேறும்.
சிறு வயது முதல் தன்னுடைய ஆளுமை பண்பை வளர்த்துக் கொண்டதால் பணம் சம்பாதிக்க அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
தனிப்பட்ட வாழ்க்கையில் தந்தை மற்றும் குருவின் ஆதரவைப் பெற வாய்ப்பு உள்ளது.
3. கன்னி
செவ்வாயின் பெயர்ச்சி கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நன்மை தரும்.
செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகவுள்ள யோகத்தால் தொழில் வெளிநாட்டில் இருந்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும்.
அவர்களுக்கு இயல்பாகவே ஆற்றல், வீரம், வேகத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
பணத்தை இலகுவாக சம்பாரித்து கொள்ளும் திறன் கன்னியில் பிறந்தவர்களுக்கு இருக்கும்.
கன்னி ராசியினரின் கஷ்டம் கொஞ்ச நாட்களுக்கு தான் இருக்கும். எளிதில் சம்பாதித்து பணக்காரர்களாக மாற வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.