நாம் நடைமுறை வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொண்டிருப்போம். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்கள் நம்மிலும் தாண்டி அது வேதங்கள் புராணங்கள் மூலம் பல விஷயங்களை நம்மால் நம்ப முடியாத அளவில் தந்துள்ளது.
நாம் வாழ்க்கையில் செய்யும் செயலாக இருந்தாலும் சரி நம் உடல் அமைப்பாக இருந்தாலும் சரி எல்லாம் வேத சாஸ்திரத்தில் விசித்திரமாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு பெண்ணின் பாத அமைப்பில் எண்ணில் அடங்காத பல விஷயங்கள் அடங்கி இருக்கின்றது என வேதங்கள் மூலம் கூறப்பட்டுள்ளது.
இந்த பாத அமைப்பை வைத்தே ஒரு கணவர்களின் தலைவிதியை சொல்ல முடியும். இந்த விஷயங்கள் பண்டை காலமத்தில் இருந்த வேதங்கள் புராணங்கள் மூலம் கூறப்பட்டுள்ளது.இது எப்படி சாத்தியம் அதில் கூறப்பட்ட விஷயங்கள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்களின் பாத அமைப்பு
ஒரு பெண்ணின் கால் அமைப்பிற்கு ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கின்றது. இது கணவனின் தலைவிதியை நிர்ணயிக்கும் என கூறப்பட்டுள்ளது. இது சாமுத்திரிகா லட்சணம் என்று கூறுவார்கள். இதை பல முனிவர்களும் சான்றோர்களும் பல கல்வெட்டின் மூலம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன்படி காலின் ஐந்து விரல்களையும் ஐந்து பெயர்கள் கொண்டு அழைத்துள்ளனர். அந்த வகையில் கட்டைவிரலின் பெயர் அங்குஸ்த்தா எனவும். இரண்டாம் விரல் தட்சாணி எனவும் நடு விரல் மத்தியமா எனவும் நான்காம் விரல் அனாமிகா எனவும் ஐந்தாம் விரல் கனிஷ்கா எனவும் அழைத்துள்ளனர்.
இதன்படி பண்டை காலத்தில் வாழ்ந்தவர்கள் ஒரு பெண் இல்லாமல் ஆண் முழுமை அடைய முடியாது என்பதை வலியுறுத்தி உள்ளனர்.
அந்த வகையில் ஒரு பெண்ணின் பாதத்தில் சக்கரம் போலவோ அல்லது மச்சம் போலவோ இருந்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் செல்வவாளியாகவும் வாழ்வார்கள் எனவும் அது அவர்களின் கணவர்களுக்கும் போய் சேரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே நேரம் தாமலை அல்லது சக்கரம் போன்ற குறியீடுகள் இருந்தால் இந்த பெண்களின் கணவர்கள் அரசியல், புகழ், செல்வம் என்பதில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் கால்களில் உள்ள விரல்களில் இரண்டாம் விரல் மற்றைய விரல்களை விட பெரிதாக இருந்தால் கணவரின் நிம்மதி பாதிக்கப்படும்.
இதை தவிர பாத அமைப்பு மலைபோல இருந்தால் அந்த பெண் சிறப்பாக வாழ்வார்கள் எனவும் இது கணவர்களின் வெற்றிக்கு வழி வகுக்கும் எனவும் கூறப்படுகின்றது.
நடுவிரலான மத்திமா விரல் கட்டை விரலை விட நீளமாக இருந்தால் அந்த பெண் மற்றவர்களுக்கு எப்போதும் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்களாம். இதனால் இவர்களுடன் இருப்பவர்கள் கவலைஅடைந்துகொண்டே இருப்பார்களாம்.
மத்திமா மற்றும் அனாமிகா விரல்கள் ஒரே அளவில் இருந்தால் அது கணவரின் தொழிலில் நஷ்டத்தை உண்டாக்கும் எனகூறுகிறார்கள்.இவர்கள் கணவரிடம் தேவை இல்லாத விதண்டாவாதம் செய்துகொண்டே இருப்பார்களாம்.
பெண்ணின் பாதம் வட்டமாக இருந்தால் அது கணவரின் வாழ்க்கையை வெற்றிகரமாகவும் அன்பமாகவும் மாற்றும். இந்த அமைப்புள்ள மனைவி கிடைத்தால் கணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்களாம்.
கட்டைவிரல் இரண்டாம் விரல் இடைவெளி இருந்தால் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும்.நடுவிரல் கட்டை விரலை விட பெரிதாக இருந்தால் இவர்களின் காதல் கதை சிறப்பாக இருக்காது.
ஒரு பெண்ணின் கால் விரல்களுக்கு இடையே இடைவெளி இருந்தால் அவர்கள் பண விஷயத்தில் மிகவும் ஊதாரிதனமாக இருப்பார்கள் என கூறப்படுகின்றது.தேவையில்லாத பொருட்கள் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.
இதை தவிர ஒரு பெண்ணின் குதிரை கால் கடினமாகவும் தட்டையாகவும் இருந்தால் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக காணப்படும். பெண்ணின் குதிகால் வட்டமாக இருந்தால் அவர்கள் மென்மையானவர்களாகவும் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.
இதனால் இந்த பெண்ணிற்கும் அவரின் கணவருக்கும் எதிர்பார்த்த அளவிற்கு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். கணவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.இந்த பாத அமைப்புக்கள் எல்லாம் கணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் என கூறப்படுகின்றது.