பொதுவாக கிரகங்கள் மாறும் பொழுது சுப அல்லது அசுப யோகங்களை உருவாகும்.
இவ்வாறு உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிகளிலுமே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், எதிர்வரும் 18 செப்டம்பர் 2024 அன்று, சுக்கிரன் துலாம் ராசிக்கு பயணம் செய்கிறார்.
இந்த பெயர்ச்சியால் மாளவ்ய யோகம் உண்டாகப் போகிறது. இந்த யோகத்தின் உருவாக்கம் குறிப்பிட்ட ராசிகளுக்கு நல்லப்படியான தாக்கங்களை கொடுக்கும்.
மாளவ்ய யோகம் அதிர்ஷ்டம் கொடுக்கப்போகும் ராசியினர் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மாளவ்ய யோகத்தால் வரும் அதிர்ஷ்டம்
1. மேஷம்
இந்த காலகட்டத்தில் சுக்கிரன் துலாம் ராசியின் ஏழாவது வீட்டில் நுழைகிறார். இதனால் நீண்ட ஆசைகள் இன்றைய தினம் நிறைவேற வாய்ப்பு இருக்கின்றது.
திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல காரியங்கள் அனைத்து கை சேரும்.
வியாபாரிகள் பல்வேறு ஒப்பந்தங்களில் லாபத்தை எதிர்பார்க்கலாம்.
புதிய வேலை தேடும் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2. தனுசு
தனுசு ராசிக்காரர்களின் 11-ஆம் வீட்டில் சுக்கிரன் நகர்கிறார்.
இந்த ராசியில் பிறந்தவர்கள் மாளவ்ய யோகத்தால் அதிகமான வருமானம் பெறுவார்கள்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
பல நாள் கனவிற்காக இன்று முதல் உழைக்க ஆரம்பிப்பார்கள்.
புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு இருக்கின்றது. இதனால் புது வணிகம் தொடர்பாக யோசிக்க ஆரம்பிப்பார்கள்.
3. துலாம்
துலாம் ராசிக்காரர்களின் லக்ன வீட்டில் மாளவ்ய யோகம் உருவாகும்.
ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு, வருமானம் அதிகரிப்பு கைக்கூடும்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
நீங்கள் மாணவர்களாக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் நினைத்து பார்க்காத மாற்றத்தை காணலாம்.