ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் பிரரதிபளிக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் செல்வ செழிப்பை வாரிவழங்கும் குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைய போகின்றார்.
எதிர்வரும் அக்டோபர் 9ஆம் திகதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.
ஏறதாழ நான்கு மாதங்களுக்கு ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைவதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருந்தாலும் ரிஷபம் மற்றும் கடக ராசியினருக்கு பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்கள் கிடைக்கப்போகின்றது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி பலன்கள்
ரிஷப டிராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு மாற்றம் வாழ்வில் மிகப்பெரும் ஏற்றத்தை கொடுக்கப்போக்கின்றது.
இந்த காலகட்டத்தில் திருமண வாழ்வில் இருந்து வந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அன்புக்குரியவர்களுடன் ஆழமான பிணைப்பு ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
பணிப்புரியும் இடத்தில் எதிர்பாராத பாராட்டு அல்லது சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் சில சமயங்களில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு.
உடல் ரீதியிலும் உள ரீதியிலும் ஆரோக்கியம் சீராக இருக்கும் எதையும் சாதித்துவிடலாம் என்ற மனபக்குவம் ஏற்படும்.
பணவரவு நல்ல நிலையில் இருக்கும். குறிப்பாக அடுத்த ஒரு வருட காலத்துக்கு பணத்துக்கு பஞ்சமே இருக்காது. பல வழிகளிலும் வருமானம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
கடக ராசி பலன்கள்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வாழ்வில் இருந்து வந்த நிதி சிக்கல்களுக்கு மொதத்தமாக தீர்வை பெற்றுக்கொடுக்கும்.
தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகின்றது. வியாபாரம் மூலம் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.
மாத ஊதியம் பெறும் தொழிலில் இருப்பவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. எதிர்பாரத வகையில் பரிசுகள் வந்து சேரும்.
குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.மொத்தத்தில் இவர்களுக்கு பொற்காலம் ஆரம்பிக்கப்போகுது.