ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கின்ற ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் என நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களிடம் முக்கியமாக ஒருசில எதிர்மறை குணங்கள் நிச்சயம் இருக்குமாம்.
அப்படி மேஷம், ரிஷபம் மற்றும் மீதுன ராசியினரினம் இருக்கும் ஒரு சில மோசமான குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு தன்னம்பிக்கையும் மனவலிமையும் உச்சத்தில் இருக்கும். இவர்கள் தங்கள் நினைத்த காரியம் நடக்கும் வரையில் அதற்காக போராடும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இவர்களிடம் இருக்கும் எதிர்மறை குணம் என்னவென்றால் இவர்களுக்கு பொறுமை என்பதே கிடையாது. அதுமட்டுமன்றி மிகவும் மோசமாக பிடிவாதம் பிடிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மனவலிமை படைத்தவர்களாகவும் லட்சிய வாதிகளாகவும் சிறந்த நிதி முகாமைத்துவ ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் இவர்களிடம் இருக்கும் எதிர்மறையான குணமானது பிடிவாதம் ஆகும். இவர்கள் கருத்துக்களுக்கு மட்டுமே முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்ற இவர்களின் எண்ணம் இவர்களின் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைகின்றது.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் நுண்ணறிவு மற்றும் புத்திக்கூர்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்கு தங்களின் தற்களின் கடின உழைப்பை வழங்கும் தன்மை இவர்களிடம் இருக்கும்.
இவர்களிடமிருக்கும் முக்கியமான எதிர்மறை குணம் என்னவென்றால், அதிகப்படியான நெகிழ்வுத்தன்மை மற்றும் உறுதியற்ற தன்மைணை கொண்டிருப்பார்கள்.இது இவர்களின் உழைப்பை பல நேரங்களில் வீணாக்கிவிம்.