பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை பண்புகளில் ஆதிக்கம் செலுத்தும்.
அது போல் எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
ஒருவருடைய பிறந்த திகதியில் அவர்களின் ராஜயோகம் குறித்த இரகசியமும் மறைந்துள்ளது. அவர்களுடைய அதிர்ஷ்ட எண்ணை எவ்வாறு கண்டறிவது என்ற கேள்வி இப்போது வந்திருக்கும்.
அதிர்ஷ்ட எண் என்பது பிறந்த திகதியின் கூட்டுத்தொகை அல்ல. உங்களுடைய பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையே உங்களின் அதிர்ஷ்ட எண்ணாக அறியப்படுகின்றது.
அந்த வகையில் உதாரணமாக, உங்கள் பிறந்த திகதி 12 செப்டம்பர் 2024 ஆக இருந்தால் 1+1+0+9+2+0+2+4=19=1+9=10=1 உங்களின் அதிர்ஷ்ட எண்ணாக அமையும்.
அதன் பிரகாரம் ராஜயோகம் அளிக்கும் அதிர்ஷ்ட எண்கள் என்னென்ன என்பது குறித்தும் அதனால் ஏற்படும் பலன்கள் தொடர்பிலும் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
1 முதல் 9 வரையிலான எண்களுள் 2,5,8,4,5,6 ஆகிய எண்கள் ராஜயோகத்தை கொடுக்க கூடிய ஆற்றல் கொண்டது என எண்கணித சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
உங்கள் அதிர்ஷ்ட எண் 4,5,6 ஆக இருந்தால்
இந்த எண்களில் ஒன்றை அதிர்ஷ்ட எண்ணாக கொண்டிருச்தால் நீங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும் மிகப்பெரும் பெயரும் புகழும் பெருவீர்கள்.
உங்கள் ராஜயோகத்தால் உங்கள் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக பலன்கள் கிடைக்கும். இவர்கள் பெரும்பாலும் பிரபல்யம் வாய்ந்தவர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. செல்வ செழிப்புக்கு குறைவே இருக்காது.
உங்கள் அதிர்ஷ்ட எண் 2, 5, 8 ஆக இருந்தால்
உங்களின் அதிர்ஷ்ட எண்கள் இந்த எண்களுள் அமைந்தால், உங்களுக்கு சொத்துக்கள் குவிந்துக்கொண்டே இருக்கும்.
இவர்கள் வாழ்வில் அளவில்லாத சொத்துகள் மற்றும் நிலம் ஆகியவற்றுக்கு அதிபதியாக இருப்பார்கள். அதனால் பல வழிகளில் இருந்தும் வருமானம் பெறும் வாய்ப்பு இவர்களுக்கு தானாகவே தேடி வரும்.