சூரியன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு செல்வதால் உச்சத்திற்கு செல்லும் அதிர்ஷ்ட ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சூரியன்
சூரியன் வாழ்க்கையின் கிரகமாகவும், ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகமாகவும் பார்க்கப்படுகின்றது.
சுமார் ஒரு வருடத்திற்கு பின்பு கிரகங்களின் ராஜாவான இவர் தற்போது இடம்பெயர்கின்றார். செப்டம் 16ம் தேதி 19:29க்கு சூரியன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு செல்கின்றார்.
கன்னி ராசி அதிக புத்திக்கூர்மை வாய்ந்த ராசியாகும். புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்குள் சூரியன் வருவதால் சில ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
மேஷம்
மேஷ ராசியில் சூரியன் 5ம் வீட்டிற்கு அதிபதியாகி தற்போது, கடன், எதிரிகள் மற்றும் நோய்கள் ஆகிய 6ம் வீட்டிற்கு மாறுகின்றார். இதனால் மேஷ ராசியினர் நன்மை அடைவார்கள்.
உங்கள் பணியிடத்தில் உங்களின் உழைப்புக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கும். முதலீடுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் பணத்தை இழக்க நேரிடும்.
கடகம்
கடக ராசியில் சூரியன் 2ம் வீட்டில் ஆட்சி செய்த நிலையில், தற்போது 3ம் வீட்டில் சஞ்சரிக்கின்றார். இந்த காலம் முழுவதும் கடக ராசியினர் மகிழ்ச்சியாக இருக்கலாம். உடல்நலப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதுடன், மன அழுத்தப் பிரச்சனையும் தீர்வுக்கு வரும்.
வேலை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படுவதுடன், இலக்கை நோக்கி உழைத்தால் வெற்றி பெறுவீர்கள். உங்கள் உயர் அதிகாரிகளுடன் நீங்கள் வைத்திருக்கும் பிணைப்பை மேம்படுத்துவீர்கள்.
விருச்சிகம்
சூரியன் விருச்சிக ராசியில் 11ம் வீட்டில் சஞ்சரிக்கும் நிலையில், 10ம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கின்றார். இத்தருணத்தில் அதிக பலன் அடைவதுடன், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்.
பணம் சம்பாதிப்பதில் திறன் கொண்ட உங்களுக்கு தற்போது நிதி நிலைமை மேம்படும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு தந்தையிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உங்களது தொழிலில் செழிக்க நம்பிக்கையுடன் இருக்கவும்.
தனுசு
தனுசு ராசியில் சூரியன் 9ம் வீட்டில் அதிபதியாக இருக்கும் நிலையில், 10ம் வீட்டை கடந்து செல்கின்றார். இந்த சூழ்நிலையில் கூடுதல் பலத்தை அளிப்பதுடன், சாதகமான முடிவுகளும் ஏற்படும்.
நீங்கள் இப்போது செய்து கொண்டிருக்கும் அனைத்து வேலைகளிலும் பெரிதும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.