இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க வெற்றிப்பெற்றுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்தியத் தேர்தல் முடிவுகளைப் போல தொகுதிவாரியான முடிவு பல சுற்றுகளாக அறிவிக்கப்படாது. ஒவ்வொரு தொகுதி முடிவும் முழுமையாகவே அறிவிக்கப்படும்.
இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதனப்படையில், இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.
வரலாற்றில் படுதோல்விகளை சந்தித்து வந்த ஜேவிபி கட்சியின் சார்பில் போட்டியிட்டு மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அணியைத் திரட்டி அரியாசனம் ஏறியுள்ள அநுரவின் இந்த வெற்றி இலங்கையில் மற்றுமொரு அரசியல் புரட்சியாகவே பார்க்கப்படுகின்றது.