சாதாரமான மக்களுக்கு காகம் என்பது ஒரு பறவை தான். ஆனால் இந்த பறவை சகுன சாஸ்திரத்தில் இடம் பிடிக்கின்றன. சனி பகவானின் வாகனமான காகம் நின்று கரையும் திசைகளிலும், கொண்டு வரும் பொருட்களிலும் பல்வேறு சகுனங்களை வெளிகாட்டுகிறது.
சிலர் சொல்வார்கள் காகம் அடிக்கடி வீட்டிற்கு வந்தால் சகுனம் இருப்பதாக கூறுவார்கள். காகம் சனிபகவானின் வாகனமாக இந்து மதத்தில் கருதப்படுகின்றது.
இதனால் காகத்தின் ஒவ்வொரு செயலும் சாஸ்திரத்தில் நன்மை தீமைக்கு எடுத்துக்கொள்ளபம். அந்த வகையில் காகம் எந்த திசையில் இருந்து கரைந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
காகத்தின் சாஸ்திரம்
காலை வேளையில் வீட்டின் மரத்தில் அமர்ந்து காகம் கரைந்தால் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தத. எப்போதும் கரைவதை கணக்கில் எடுக்க கூடாது.
காலை நேரத்தில் கரைவதை தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் ஆற்றங்கரை ஓரத்தில் காகம் அமர்ந்து கரைந்தால் ன்நைறய நாள் கட்டாயமாக மழை பெய்யும் என கூறப்படுகின்றது.
காகம் தங்கள் எதிரில் வலப்புறமிருந்து இடதுபுறம் பறந்து சென்றால் லாபம் கிடைக்கும். அதுவே இடதுபுறம் இருந்து, வலதுபுறம் பறந்து சென்றால் நஷ்டம் உண்டாகும் என்று பொருளாகும்.
வீட்டில் மேற்கு திசையில் காகம் கரைகிறது என்றால் மது, நெல், முத்து, பவளம் மற்றும் கடல்விளை பொருட்கள் ஆகியவற்றில் அதிக லாபம் கிடைக்கபோகின்றது என்று நம்பப்படுகிறது.
இதுவே வடக்கு திசை நோக்கி காகம் கரைந்தால் ஆடைகள் அல்லது ஏதாவது ஒரு வாகனம் வாங்கப்போகின்றீர்கள் என்ற சகுனமாகும். ஆனால் காகம் ஒன்று அமைதியாக ஒரு இடத்தில் இருந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.
காகம் திடீடிரென வீட்டில் தென்கிழக்கு திசை நொக்கி கரைந்தால் வீட்டில் தங்கம் சேரும் என கூறப்படுகின்றது. இந்த விடயங்கள் சாஸ்திரத்தின் அடிப்படையில் கூறப்பட்டதாகும்.