பொதுவாக ஜோதிடம் என்பது எமது வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்துகின்றது.
நமது ஆளுமைகளைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குதல், எதிர்கால கணிப்புகள் உள்ளிட்ட விடயங்களை தெரிந்து கொள்வதற்கு ஜோதிடம் பயன்படுகிறது.
பன்னிரண்டு ராசிகளில், சில அவற்றின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் திறன்களை கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் மற்றவர்களை விட தனித்துவமானவர்களாக இருப்பார்கள்.
புகழ் அனைவருக்கும் உரியதாக இருந்தாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அதற்காகவே பிறந்தவர்கள் போல் காட்சிக் கொடுப்பார்கள்.
அந்த வகையில், யாராலும் தடுக்க முடியாத வெற்றியை பெறப்போகும் யோகத்தை கொண்ட ராசிகள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பாக தலைமைத்துவ குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு வகையான தன்னம்பிக்கை இருக்கும். எப்போதும் அவர்களின் இலட்சியத்தை நோக்கியே சிந்தித்து கொண்டிருப்பார்கள். அதிகப்படியான ஆர்வம் இவர்களிடம் இருக்கும். மற்றவர்களை ஈர்க்கும் ராசியாக சிம்ம ராசி பார்க்கப்படுகின்றது.
2. மகரம்
ஒழுக்கத்தையும் விடாமுயற்சியையும் இயல்பிலேயேக் கொண்டவர்களாக மகர ராசியில் பிறந்தவர்கள் பார்க்கப்படுகிறார். இவர்களின் வெற்றியை அவர்களின் கையில் தான் இருக்கின்றது. ஒரு நடைமுறை அணுகுமுறை மற்றும் திட்டமிடல் இவற்றின் மூலம் சவால்களை இலகுவாக எதிர்க் கொள்வார்கள்.
இலட்சியத்தை உயிர் மூச்சாக கொண்டு செயற்படுவார்கள். பொறுமை, விடாப்பிடியான இயல்பு மகர ராசியில் பிறந்தவர்களின் நீண்ட கால வெற்றியை தீர்மானிக்கின்றது. தன்னம்பிக்கை கொண்ட ராசியினராக பார்க்கப்படுகிறார்கள். அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்த ராசியினரை உயரத்திற்கு கொண்டு செல்கின்றது.
3. விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் அவர்களின் வெற்றியை காண ஆர்வம் காட்டுவார்கள். மற்றவர்கள் மீது தீவிர கவனம் செலுத்துவார்கள். எவ்வளவு சிக்கலான நிலை வந்தாலும் அதனை சமாளிக்கும் திறன் அவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.
தந்திரசாலிகளான இவர்கள் தடைகளை முறியடித்து, வெற்றி பெறுவார்கள். அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தங்களுக்கு கொடுத்த வேலைகளை செய்வார்கள். ஆழ்ந்த உள்ளுணர்வு புதுமையான சிந்தனைவழிவகுக்கும். தோல்வியை கண்டு பயம் கொள்ளாமல் ஒரு உறுதிப்பாட்டுடன் நடந்து கொள்வார்கள்.