இந்து மதத்தின் பிரகாரம் பிறருக்கு தானம் கொடுப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
அதே சமயம், தானம் செய்யும் பொழுது குறிப்பிட்ட சில பொருட்களை மறந்தும் கொடுக்கக் கூடாது என்பார்கள். ஒருவருக்கு தானம் கொடுக்கும் பொழுது ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் சாதகமாக இருந்து அவர்களின் நிலையை மேம்படுத்தும் என சொல்லப்படுகின்றது.
நாம் தானம் செய்யாவிட்டாலும் சில நேரங்களில் நன்கொடைகளை விட பரிசுகளை பரிமாறிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் பல வரும். இத்தகைய சூழ்நிலையில் ஜோதிடத்தில், பரிசு அல்லது நன்கொடைகளை ஒருவருக்கு கொடுக்கும் பொழுது சில விதிகளை கடைபிடிக்க வேண்டும் என சொல்லப்படுகின்றது.
உதாரணமாக, திருமணம், பிறந்தநாள், ஆண்டுவிழா போன்ற விசேஷ சந்தர்ப்பங்களில் பரிசுகள் வழங்குவது வழக்கம். இப்படி கொடுக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்பில் இருக்கும். பரிசு கொடுக்கும் கிரகத்துடன் பொருந்தாவிட்டால் வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அப்படியாயின், உறவினர்களுக்கு மறந்தும் கொடுக்கக் கூடாத பரிசு பொருட்கள் தொடர்பாக தொடர்ந்து பார்க்கலாம்.
பரிசாக கொடுக்கக் கூடாத பொருட்கள்
1. வாஸ்து சாஸ்திரத்தின் படி, மீன் தொட்டி போன்று நீர் தொடர்பான எந்தப் பொருட்களையும் அலங்காரப் பொருட்களையும் யாருக்கும் பரிசாக கொடுக்கக் கூடாது. அதனை மற்றவர்களிடமிருந்து பரிசாக வாங்கவும் கூடாது.
2. சிலர் கண்ணாடி அல்லது கத்தி போன்ற கூர்மையான பொருட்களை பரிசாக கொடுப்பார்கள். ஆனால் இது கெட்ட சகுனத்தின் அறிகுறியாக கருதப்படுகின்றது. அத்தகைய பரிசு பொருட்களை மறந்தும் யாருக்கும் கொடுக்காதீர்கள். ஏனெனின் அத்தகைய பரிசு கொடுப்பவருக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
3. பரிசுகள் கொடுக்கும் பொழுது அதன் நிறத்தில் கவனம் செலுத்த வேண்டும். கறுப்பு நிறப் பொருட்கள் எதையும் மற்றவர்களுக்கு பரிசாக கொடுக்க வேண்டாம். இது எப்போதும் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் கருப்பு நிறம் மரணத்துடன் தொடர்புடையது. இது உங்கள் மீது தவறான புரிதலை ஏற்படுத்தும். சில சமயங்களில் உறவுகளில் விரிசலை கூட ஏற்படுத்தலாம். அதே சமயம் சிவப்பு நிற புத்தகங்களை பரிசாக கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டாம்.
4. நண்பர், உறவினர் அல்லது நேசிப்பவருக்கு ஒரு போதும் கடிகாரத்தை பரிசாக கொடுக்க வேண்டாம். இது உங்களுக்குள் இருக்கும் உறவில் விரிசலை ஏற்படுத்தும். நீண்ட நாட்கள் பயணம் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இப்படியான தவறுகளை குறைத்து கொண்டால் உங்கள் உறவு சிறக்கும்.
5. ஒரு நபருக்கு பர்ஸ், புதிய காலணிகள் அல்லது செருப்புகள் ஆகியவற்றை பரிசாக கொடுப்பது அசுபம். மீறி கொடுத்தால் அவர்கள் உங்களை விட்டு விலகிச் சென்று விடுவார்கள்.