பொதுவாகவே மனிதர்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. பொறுப்பு வாய்ந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப திருமண வாழ்க்கை பெரிதும் துணைப்புரிகின்றது.
திருமணம் செய்துக்கொள்வதன் காரணமாக கடமைகளும் பொறுப்புக்களும் அதிகரிப்பதன் காரணமாக தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் திருமண பந்தத்தை விரும்புவது அருகிவருகின்றது.
திருமணத்தையே லட்சியமாக கொண்ட ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Over Excited About Marriage
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகளவில் தாக்கம் செலுத்துவதாக நம்பப்டுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் திருமண வாழ்க்கை மீது அதீத எதிர்ப்பார்ப்பு மற்றும் ஆசையை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இன்னும் சொல்லப்போனால் திருமணம் செய்வதைதையே இவர்கள் இலக்காக கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எந்த விடயத்துக்கும் பயப்படாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த அதீத ஆர்வம் கொண்ட குணம் வாழ்ககை மீது மற்றவர்களுக்கு இருக்கும் பயத்தை இவர்களுக்கு இல்லாமல் செய்துவிடுகின்றது.
மேஷ ராசியினர் திருமணத்தை தங்களின் மகிழ்சியின் திறவுகோலாக பார்க்கின்றனர்.வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க இவர்கள் எப்போதும் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
அதனால் திருமணம் குறித்து அதிக எதிர்ப்பார்பையும் துணையின் மீது கட்டுக்கடங்காத அன்பையும் கொண்டிருக்கின்றார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றத்துடன் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதை அதிகம் விரும்புகின்றார்கள்.
திருமணத்தின் மூலம் அவர்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பதால், திருமண பந்தத்தை அதிகம் விரும்புகின்றார்கள்.
இவர்கள் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை மிகவும் விரும்புகின்றார்கள்.அதன் நினைவுகள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும்.அதன் காரணமாக திருமணம் செய்வதில் அதிக ஆசை இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக வாழ்வதற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் திருமணத்தை காதல் மற்றும் மகிழ்ச்சியின் ஆரம்பமாக பார்க்கின்றமையினால் இதன் மீது இவர்களுக்கு இனம் புரியாத பிரியம் இருக்கும்.
இவர்களின் திருமண நிகழ்வு குறித்தும் அடிக்கடி கனவு காணும் பழக்கம் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.