பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடப்பிடுகின்றது.
அது போல் எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் வகையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது. அவர்கள் பெரும்பாலும் பணப்பிரச்சினையை ஒருபோதும் எதிர்நோக்குவது கிடையாது என நம்பப்படுகின்றது.அவை எந்தெந்த திகதிகள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
4 மற்றும் 9 ஆகிய எண்கள்
எண் கணித சாஸ்திரத்தில் சில எண்கள் அதிர்ஷ்ட எண்களாக குறிக்கப்படுகின்றது. இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பணக்கஷ்டமே வராது என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
பிறந்த திகதிகள் 4, 13, 22 மற்றும் 31 ஆக அமைந்தால் அவர்களின் விதி எண் 4 ஆகும்.அதேபோல பிறந்த தேதிகள் 9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு விதி எண் 9 ஆகும்.
செவ்வாய் கிரகமானது 4 மற்றும் 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை ஆளுகின்றமையால் இவர்கள் வாழ்வில் பணப்பிரச்சினையை சந்திப்பது மிகவும் அரிதான விடயமாகும்.
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற குணம் இயல்பாகவே இருக்கும். அதன் காரணமாகவே இவர்களிடம் பணம் குவிந்துக்கொண்டே இருக்கும்.
இவர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தாலும் மற்றப்பக்கம் இவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் நினைத்ததை அடைந்தே தீரும் போராட்ட குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் வாழ்வில் நல்லதோ கெட்டதோ திடீரென்று நடக்கும். இவர்கள் எப்போதும் அதனை எதிர்கொளும் மனநிலையுடன் இருப்பார்கள்.
இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே வியாபாரம் மற்றும் நிதி முகாமைத்துவம் சார்ந்த அறிவு காணப்படும்.
இவர்கள் நண்பர்களை தேடிக்கொள்ள அதிக சிரமப்பட தேவையில்லை மிகவும் சாதாரணமாக நண்பர்கள் சேர்ந்துவிடுவார்கள்.
இவர்களுக்கு எதிரிகள் உருவாகுவது மிக மிக அரிது. இவர்களின் குணத்தை மனதளவில் வெறுப்பவர்கள் யாரும் இருக்கவே முடியாது.
இவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். அதனை வெளிப்படுத்தவும் அதிக ஆர்வம் காட்டுவார்கள் மொத்தத்தில் இந்த இரண்டு திகதிகளில் பிறந்தவர்களிடம் வாழ்நாள் ழுழுவதும் பணம் மற்றும் அனைத்து விதமாக செல்வங்களும் குறைவின்றி இருந்துக்கொண்டே இருக்கும்.