ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராசி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து தான் அவர்களின் வாழ்க்கை என்ன நடக்கும் என்பதனை முன்பே கணிக்கிறார்கள்.
கிரக மாற்றங்கள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதிப்பதாகவும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷச மஹாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
இந்த ஷச மஹாபுருஷ யோகம் கும்பத்தில் சனிபகவானின் சஞ்சாரமாவதால் ஏற்படுகின்றது. இதன் தாக்கம் அனைத்து நட்சத்திரங்களிலும் இருக்கும்.
அதில் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தான் அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த ராஜயோகம் அக்டோபர் 31 அன்று அதாவது தீபாவளி அன்று உருவாகிறது.
அந்த வகையில், ஷசமஹா புருஷ ராஜயோகத்தால் எதிர்பாராத பலன்களை பெறப்போகும் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கிருத்திகை
கிருத்திகை நட்சத்தில் பிறந்தவர்கள் ஷச மஹாபுருஷ யோகத்தின் காரணமாக சனிபகவானின் பூரண ஆசீர்வாதங்களை பெறுவார்கள்.
சனிபகவான் ஒரு கோபக்காரர் என்றாலும் இந்த யோகத்தால் நல்ல பலன்களை கொட்டிக் கொடுக்கப்போகிறார்.
இந்த காலகட்டத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை முழுவதும் மாறி விடும்.
செய்யாமல் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பணிகள் யாரும் இந்த காலப்பகுதியில் செய்து முடிக்கப்படும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இலாபம் அதிகமாக கிடைக்கும்.
புதிய தொழில் துவங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் நல்ல நேரமாக பார்க்கப்படுகின்றது.
திருவாதிரை
ஷச மஹாபுருஷ ராஜயோகத்தால் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கப்போகின்றது.
வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு ஏற்பட்டு சம்பளமும் அதிகமாக கிடைக்கும்.
திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சில சமயங்களில் குழந்தை வரமும் கிடைக்கலாம்.
திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். வரன்கள் பார்ப்பதை தீவிரப்படுத்துங்கள்.
ஆயில்யம்
ஆயில்ய நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கையில் ஷச மஹாபுருஷ யோகம் பலவிதமான துன்பங்களிலிருந்து விடுதலை தரப்போகின்றது.
நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த பிரச்சினைகள் அனைத்தும் இந்த காலப்பகுதியில் முடிவுக்கு வரும்.
ராஜாவைப் போல் வாழ்க்கையில் முன்னேறி மகிழ்ச்சி இருக்கும்.
திருமணம் செய்ய விரும்புவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வரன் தேடிவரும்.