பொதுவாக உறக்கத்தில் கனவுகள் வருவது சாதாரணம். ஆனால் சிலர் உறங்குவது தெரியாத அளவிற்கு உறக்கம் வரும். உறக்கத்தில் கனவுகள் நமக்கு வரும் போது அதில் சிலவை மகிழ்ச்சியான நிகழ்வுகளாக இருக்கும்.
சிலருக்கு அச்சமூட்டும், அதிர்ச்சியை ஏற்படுத்தும் துன்பமான கனவுகளும் வரலாம். பகல் நேரங்களில் காணும் கனவுகள் பலிக்காது என நமது முன்னோர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம்.
ஆதிகாலை நான்கு மணிக்கு மேல் கனவு கண்டால் அது பலிக்கும் என சொல்வார்கள். இதற்கு காரணம் தேவர்கள் எல்லோரும் தியான நிலையில் இருக்கும் நேரத்தில் நாம் கனவாக காண்பது அவர்கள் நமக்கு காட்டும் எச்சரிக்கை என்பது ஐதீகம்.
இந்த நிலையில் சல கனவு காண்பது நம் அதிஷ்டத்திற்கு வழிவகுக்கும் என கூறப்படுகின்றது. அது எந்த கனவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்கம்
நாம் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் கனவில் தங்கத்தை கண்டால் நீங்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெறப் போகிறீர்கள் என அர்த்தம். அவர் நம்மை ஆசிர்வதித்துள்ளார்.
இதனால் நேர்மையான வழியில் நமக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். இப்படியான கனவுகள் மூலம் தெரிவது பணம் வருவதற்கான வாய்ப்பு உங்களுக்கு அமையப் போகிறது என்பது தான்.
ரோஜா
மலர்கள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். அந்த வகையில் கனவில் ரோஜா மலரை கண்டால் பணம் கொட்டப் போகிறது பணக்காரர் ஆக போகிறீர்கள் என்பதை இது உணர்த்துகிறது. அதேபோல தாமரை மலரை கனவில் கண்டால் லட்சுமி தேவியின் அருள் உங்கள் பக்கம் திரும்பியுள்ளது என அர்த்தம்.
விளக்கு
அதிகாலையில் விளக்கை கண்டால் அதுவும் விளக்கு எரிவது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கை மங்களகரமாக இருக்கப் போகிறது என்று அர்த்தம். தேவைகள் ஏதாவது இருந்தால் கண்டிப்பாக நிவர்த்தி ஆகும்.
மோதிரம் அணிதல்
கனவில் மோதிரத்தை கண்டால் லட்சுமிதேவி உங்களை ஆசீர்வதிக்கிறார் என்று அர்த்தமாம். உங்களிடம் பணம் பெருகும். இந்த கனவு உங்களை பணக்காரன் ஆக்கக்கூடிய அம்சத்தை காட்டுகிறது.
பாம்பு
அதேபோல கனவில் பாம்பு வந்தால் ஆபத்து என்பது நம் அனைவரும் அதை ஆபத்தாக பார்ப்பார்கள். ஆனால் இந்த பாம்பு பணப்பெட்டி அருகே இருந்தால் உங்களை தேடி பணம் வரப்போகிறது என்று அர்த்தமாம். கனவு சாஸ்திரப்படி இது சொல்லப்பட்டுள்ளது. இதுபோன்ற கனவுகள் வந்தால் நீங்கள் லட்சாதிபதியாகப்போகிறீர்கள் என அர்த்தம்.