புற்றுநோய் சிகிச்சைக்காக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் தொடர்பில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மருந்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பயன்படுத்தப்படுவதில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிப்பதாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் வீல்பிரட் குமாரசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த 9 மாத காலப் பகுதியில் பெருமளவு நோயாளிகள் ரஷ்ய புற்றுநோய் மருந்தைப்பயன்படுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தொற்றுநோய்களுடன் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பற்றிய சகல தகவல்களையும் சுகாதார அமைச்சிற்கு வழங்குமாறு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அதிகாரிகளைப் பணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனியார் மருத்துவமனை ஒழுங்குறுத்தல் அமைப்பின் ஊடாக சகல தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவித்தல் விடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.