பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைந்த நிலையில் அவரை பற்றிய தகவல்களும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இவரின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரை பற்றிய தகவல் பேசப்பட்டு வரும் நிலையில் அவரின் வாழ்க்கயில் நடந்த சம்பவங்களை தெரிந்து கொள்ளலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இணையதளம் ஒன்றிற்கு ரத்தன் டாடா பகிர்ந்து கொண்ட விடயங்களை பார்ப்போம்.
தாய், தந்தை விவாகரத்து
அப்போது அவர், எங்களுடைய குழந்தை பருவம் நன்றாக சென்றது. ஆனால், எங்களது தாய் மற்றும் தந்தையின் திருமண விவாகரத்திற்கு பின்பு நானும், என்னுடைய சகோதரரும் நிறைய கஷ்டங்களை அனுபவித்தோம்.
பின்பு, எங்களை பாட்டி தான் கவனித்துக் கொண்டார். என் அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்த போது பள்ளிகளில் எங்களை கிண்டல் செய்து பேசுவார்கள். ஆனால், அந்த நேரத்தில் எங்களுடைய பாட்டி சண்டை போட கூடாது, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை செய்வார்.
அதுமட்டுமல்லாமல், எனக்கும் என்னுடைய தந்தைக்கும் மனக்கசப்புகள் அதிகமாக இருந்தன. நான் வயலின் கற்றுக் கொள்ள நினைத்த போது, அவர் என்ன பியானோ கற்க வேண்டும் என்றார்.
நான் படிப்பதற்கு அமெரிக்க செல்ல நினைத்த போது, அவர் என்னை பிரிட்டன் செல்ல வேண்டும் எனக் கூறினார்.
மேலும், நான் கட்டிட வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என்று நினைத்த போது, அவர் என்னை பொறியாளர் ஆக வேண்டும் எனக் கூறினார். இருந்தாலும் ரத்தன் டாடா தனது விருப்பப்படியே அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்துக்கு படிக்க சென்றார்.
அதற்கு முழு காரணம் தனது பாட்டி என்றும் அவர் கூறியுள்ளார். ரத்தன் டாடாவின் தாய் 2 ஆவது திருமணத்திற்கு பிறகு அவருடைய வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருப்பது தந்தையும், பாட்டியும் மட்டும் தான்.
காதல் கதை
ரத்தன் டாடா லாஸ் ஏஞ்சல் நகரத்தில் இருந்த போது தன் மனதிற்கு பிடித்தமான பெண்ணை பார்த்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார்.
ஆனால், அந்த நேரத்தில் அவருடைய பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் இந்தியா திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, தன்னுடைய காதலியும் இந்தியா வருவதாக ரத்தன் டாடா நினைத்துள்ளார்.
ஆனால், 1962 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே போர் ஏற்பட்டதால் காதலியின் தந்தை, அவரை இந்தியா வர அனுமதிக்கவில்லை. அதனால், அவர்களது காதல் முறிந்துள்ளது.
இதன் பின்னர், அவருடைய குடும்பம் 4 முறை திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்த போதும் அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய மனமில்லாமல் தன்னுடைய பிஸ்னஸ் மீது அவருக்கு காதல் வந்துள்ளது.
மேலும், அவருக்கு ரத்தன் டாடா தனக்கும் ஒரு குடும்பம் வேண்டும் என்று எண்ணி தனிமையை நினைத்து வருத்தப்பட்டுள்ளார். முதியோருக்கான ஒரு நிறுவனத்தை தொடங்கி வைத்து, தனிமை எவ்வளவு கொடுமை என்பது பற்றி கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டில், ரத்தன் டாடாவின் காதலியான சிமி சிதனது ட்விட்டர் பக்கத்தில் ரத்தன் டாடாவின் ஃப்ளாஷ்பேக் படத்தை வெளியிட்டு, “ரத்தனுக்கும் எனக்கும் நீண்ட வரலாறு உண்டு. அவர் சிறந்த மனிதர், எல்லா வகையிலும் சிறந்தவர். நகைச்சுவை, அடக்கம், குறையற்றவர்.
பணத்தை அவர் ஒருபோதும் ஊக்குவிப்பவராக இருக்கமாட்டார். வெளிநாட்டில் இருப்பது போல் இங்கு அவர் நிம்மதியாக இல்லை” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரத்தன் டாடாவின் மறைவுக்கு சிமி தனது இரங்கல் பதிவில், “நீங்கள் சென்றுவிட்டீர்கள் என்று கூறுகிறார்கள். உங்கள் இழப்பை தாங்குவது மிகவும் கடினம். பிரியாவிடை நண்பரே” என்று கூறியுள்ளார்.