ஜோதிட சாஸ்த்திரத்தின் பிரகாரம் 9 கிரகங்களுக்கு உகந்த நாட்கள் மற்றும் நிறந்ககள் என்பன முன்ளோர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நாம் அணியும் ஆடைகள் நமது ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகவும் அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் மாற்றுவதாக குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் வாரம் முழுவதும் குடும்ப சூழல் ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மகிழ்ச்சியாக இருக்க எந்த தினத்தில் எந்த நிறத்தில் ஆடை அணிவது சிறந்தது என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
எந்த நாட்களில் எந்த நிற ஆடை ?
திங்கள் – வெள்ளை
திங்கள் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாளாக பார்க்கப்படுகின்றது. இந்த நாளில் வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது மனதுக்கு அமைதியையும் உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கின்றது.
வெள்ளை நிறம் அமைதியையும் தூய்மையையும் குறிக்கின்றது. இந்த நிற ஆடையை திங்கள் கிழமைகளில் அணிவர்து அதிர்ஷடத்தை கொடுக்கும் என்பது ஐதீகம்.
செவ்வாய் – சிவப்பு
தைரியம் மற்றும் உறுதியின் கிரகமாக திகழும் செவ்வாய் கிரகத்திற்கு உகந்த நிறமாக சிவப்பு நிறம் பார்க்ப்படுகின்றது.
இந்த நிறத்தில் ஆடை அணிவது தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்துவதாக அடையும்.
நாள் முழுவதும் அதிக ஆற்றலுடன் வேலை செய்வதற்கும் அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும் வெவ்வாய் கிழமைகளில் சிவப்பு நிற ஆடை அணிவது சிறப்பு.
புதன் – பச்சை
பச்சை நிறமானது புதன் கிரகத்துடன் தொடர்புடைய நிறமாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் இது பசுமையின் குறியீடாகவும் வளர்ச்சின் சின்னமாகவும் பார்க்கப்படுகின்றது.
பச்சை நிறத்தில் ஆடை அணிவது புதனை மகிழ்விக்கிறது மற்றும் அறிவார்ந்த திறனைக் கூர்மைப்படுத்துவதாகவும் அமையும்.
வியாழன் – மஞ்சள்
மஞ்சள் நிறமானது நம்பிக்கை, ஞானம் மற்றும் தெளிவு ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.
இது செல்வ செழிப்பை வழங்கும் குரு பகவானான வியாழன் கிரகத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. இந்த தினத்தில் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொடுக்கும்.
வெள்ளி – இளஞ்சிவப்பு
இளஞ்சிவப்பு நிறமானது அன்பு, நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தை பறைசாற்றும் நிறமாக பார்க்கப்படுகின்றது.
இது அழகு மற்றும் பாசத்தின் கிரகமான புவியுடன் தொடர்புடையது. எனவே வெள்ளிக்கிழமையன்று இளஞ்சிவப்பு நிற ஆடையை அணிவது கருணை மற்றும் உணர்ச்சியை ஊக்குவிக்ப்பதுடன் மகாலட்சுமியின் ஆசியையும் கொடுக்கும்.
சனிக்கிழமை – கருப்பு அல்லது கரு நீலம்
கருப்பு மற்றும் கரு நீல நிறங்கள் சனி பகவானுடன் தொடர்புடைய நிறங்கள் இந்த தினத்தில் இந்த நிற ஆடைகளை அணிவது சனி பகவானின் ஆசியை கொடுக்கும்.
உங்களின் ராசியின் பிரகாரம் சனியின் கோப பார்வை உங்கள் மீது இருந்தாலும் அவருக்கு உகந்த நிறத்தில் ஆடை அணிவது சனிபகவானை மகிழ்விக்கும்.
ஞாயிறு – செம்மஞ்சள் அல்லது தங்க நிறம்
ஞாயிற்று கிழமை சூரிய பகவானுடன் தொடர்புடையது என்பதால் இந்த நாளில் செம்மஞ்சள் அல்லது தங்க நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டம் கொடுக்கும்.
இந்த நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டால் நாள் ழுழுவதும் அதிக மகிழ்சியாகவும் தன்னம்பிக்கையுடளும் பணியாற்ற முடியும்.