இந்திய தொழிலதிபரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், இவர் இறப்பதற்கு முன்பு, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான சில வழிகளை கூறியுள்ளார்.
ரத்தன் டாடாவின் வழிமுறைகள்
உங்களது லட்சியங்களும், இலக்குகளும் பெரிதாக இருப்பதுடன், கனவு காண்பதற்கு கூட ஒரு எல்லைக்கோட்டினை வைத்துக்கொண்டு அதற்குள்ளாகவே இருக்கக்கூடாது.
வெற்றி என்பது ஒரே முயற்சியில் வரும் விஷயம் இல்லை. எனவே, விடாமுயற்சியினை உங்களது நண்பனாக்கிக் கொள்ளவும்
நீங்கள் செய்யும் தவறுகள் உங்களுக்கு நல்ல பாடங்களை கற்றுக்கொடுக்கும். ஆகவே எந்தவொரு தவறு செய்தாலும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில் கருத்தாக இருக்கவும்.
புதுமையை வரவேற்கும் தன்மை உங்களிடம் இருக்க வேண்டும். புதுப்புது விடயங்களை எப்பொழுதும் கற்றுக்கொண்டே இருக்கவும்.
வாழ்க்கையில் உங்களுக்கென இருக்கும் நெறிமுறைகள், தரநிலைகளை வைத்துக் கொண்டு தான் வாழ வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் தன்நிலை மாறாமல் இருப்பீர்கள்.
உங்களை தனிப்பட்ட வாழ்விலும், தொழில் ரீதியாக உயர்த்தும் நபர்களுடன் நல்ல உறவினை வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு சமூகம் சில விடயங்களைக் கொடுக்கும் பொழுது, நீங்களும் அதற்கு சில விடயங்களை திரும்ப கொடுக்க வேண்டும். நலிந்தோருக்கு உதவி செய்ய வேண்டும். அப்பொழுது தான் உங்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி எப்பொழுதும் நிலைக்கும்.
வாழ்க்கை, உங்களை எவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றாலும், அடக்கத்துடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.