பொதுவாக அனைவரும் தனக்கு கிடைக்கும் துணை எப்போதும் தங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
காதல் எந்தளவுக்கு சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும் கொடுக்கின்றதோ அதை விட பல மடங்கு வலியையும் வேதனையும் காதல் தோல்வி கொடுக்கும்.
காதலில் ஏமாற்றப்படுவதை விட பூமியில் நரகத்தை வேறு வழியில் அனுபவித்திடவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களை காதல் விடயத்தில் ஏமாற்றுவது யாராலும் முடியாது. இவர்கள் காதல் செய்யும் போது மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பார்கள்.
அப்படி காதல் செய்யும் விடயத்தில் மிகவும் உஷாராக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் காதல் விடயத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்வார்கள்.
அவர்கள் காதலில் ஏமாற்றப்படுவது மிகவும் அரிது. இவர்களின் சாமர்த்தியமான பேச்சாற்றலால் துணையை தங்களுக்கு ஏற்றாதல் போல் மாற்றிவிடும் தன்மை இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
அவர்கள் தவறு செய்தாலும் துணைியிடமிருந்து சாமர்த்தியமாக தப்பித்து கொள்ளும் வழியும் அவர்களுக்கு தெரியம். எனவே இவர்களை காதல் செய்து ஏமாற்றுவது ஒருபோதும் நடக்காத காரியம்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களை அடக்கியாளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் பேச்சை எப்படி சொன்னால் மற்றவர்கள் கேட்பார்கள் என்பது இவர்களுக்கு தெரியும்.
காதல் செய்யும் போதும் மிகவும் தெளிந்த சிந்தனையுடன் செயல்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தங்களுக்கு மரியாதை கிடைக்காத இடத்தில் ஒரு போதும் இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு பொருத்தமான துணையை தெரிவு செய்துவிட்டு தான் காதல் செய்யவே ஆரம்பிப்பார்கள். அதனால் காதல் விடயத்தில் இவர்களை ஏமாற்றுவது மிகவும் கடினம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் உணர்வுகளை தங்களுக்குள் மறைத்து வைத்துக்கொள்ளும் தன்மையில் இருப்பார்கள்.
அதனால் காதல் விடயத்தில் அதிகமான பேசும் தன்மை இவர்களுக்கு இருக்காது. ஆனால் அந்த அமைதிக்கு பின்னால் மிகுந்த புத்திசாலித்தனம் அடங்கியிருக்கும்.
இவர்களை எந்த விடயத்திலும் எளிமையாக ஏமாற்றிவிட முடியாது. குறிப்பாக காதலில் மிகவும் உஷாராகவே இருப்பார்கள்.