டாடாவைக் காண கோடீஸ்வரர்களும் அரசியல் தலைவர்களும் காத்திருந்த காலகட்டத்தில், ஒரு சாதாரண மனிதரை சந்திப்பதற்காக டாடா 150 கிலோமீற்றர் தூரம் காரில் பயணித்ததைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
150 கிலோமீற்றர் தூரம் பயணித்த டாடா
2021ஆம் ஆண்டு, டாடா குழும தலைவரான ரத்தன் டாடா, மும்பையிலிருந்து புனேவுக்கு 150 கிலோமீற்றர் தூரம் காரில் பயணித்து ஒரு நபரை சந்தித்துள்ளார்.
அரசியல்வாதிகளைப்போல, ஊடகவியலாளர்களையும் புகைப்படக்கலைஞர்களையும் அழைத்துச் செல்லவும் இல்லை அவர். அவர் சந்திக்கச் சென்றது ஒரு சக கோடீஸ்வரரான தொழிலதிபரையும் அல்ல!
தன்னிடம் முன்னர் பணியாற்றிய ஊழியர் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார் என்பதை அறிந்த டாடா, அவரை சந்திப்பதற்காகத்தான் 150 கிலோமீற்றர் தூரம் காரில் பயணித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், அப்போது அவருக்கு வயது 83!
ஆக, சாதாரண மனிதர்களையும் மதித்து அவர்கள் நலன் மீதும் அக்கறை காட்டினார் என்கிறார்கள் பலர்.
அவர்களில், டாடாவுக்கு செய்தித்தாள் போடும் Harikesh Singhம் ஒருவர். சிங்குடைய உறவினர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, உடனடியாக டாடா நினைவு மருத்துவமனையில் அவரது சிகிச்சைக்காக கடிதம் ஒன்றைக் கொடுத்ததுடன், 5 லட்ச ரூபாயும் கொடுத்ததாக தெரிவிக்கிறார் சிங்.
டாடாவின் கார் துடைக்கும் வேலையைச் செய்த Hussain Shaikhம் அவருக்கு அஞ்சலி செலுத்துவோர் வரிசையில் நின்றவர்களில் ஒருவர்.
தனது மகளுக்கு திருமணம் என்றதும், டாடா நிறுவன ஊழியர் ஒருவர் மூலமாக 50,000 ரூபாய் கொடுத்து அனுப்பினதை நினைவுகூர்கிறார் ஹுசைன்.
ஆக, வெளியே தெரியாமலே ஏராளமான எளியோருக்கு டாடா உதவி வந்துள்ளார் என்பது, அவர் இறந்த பிறகு அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறும் செய்திகளிலிருந்து தெரியவந்தவண்ணம் உள்ளது.