குரு புஷ்ய யோகம் என்பது குருவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் பூசம் நட்சத்திரம் இணைந்து வருவது இந்த யோகத்தை குறிக்கும். இந்த நாளில் சில பொருட்களை வீட்டின் தேவைக்கு வாங்கும் போது அந்த பொருட்கள் வீட்டில் காலத்திற்கு குறையாமல் அப்படியே இருக்கும்.
இதன் மூலம் செல்வத்திற்கு எந்த விதமான பஞ்சமும் வராது. தற்போது நாடு முழுவதும் தீபாவளியை முன்னிட்டு கொண்டாட தயாராகிகொண்டு இருக்கின்றனர். இப்படி பொருட்கள் வாங்கும் போது புஷ்ய யோகத்தால் பொருட்கள் வாங்குவதற்கான அதிர்ஷ்டம் ஏற்பட போகிறது.
இந்த நேரத்தில் சொத்து, ஆபரணங்கள், வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது சாதகமாக இருக்கும். இந்த குரு புஷ்ய யோகம் பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
குரு புஷ்ய யோகம்
பூசம் நட்சத்திரமே புஷ்யம் எனக் கூறப்படுகிறது. சாதாரண நாட்களில் பூசம் நட்சத்திரம் ஏற்பட்டால் அது அசுபமாக கருதப்படும். ஆனால், குருவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் பூசம் நட்சத்திரமும் இணைந்து வந்தால் அப்போது குரு புஷ்ய யோகம் உருவாகிறது.
இது பல வகையில் சில ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் சில பொருட்களை வாங்குவதும் சிறப்பை கொடுக்கிறது. தற்போது உருவாகியுள்ள குரு புஷ்ய யோகத்துடன், சர்வார்த்த சித்தி யோகமும், அமிர்த சித்தி யோகமும் இணைந்து அரிய வகையும் உருவாகியுள்ளது.
இது நிதி பிரச்சனையை முற்றாக அழிக்கும். இந்த நாளில் கட்டாயம் நகைகள் சொத்தக்கள் வாங்குவது சிறப்பானதாக இருக்கும். இந்த யோகம் அக்டோபர் 24 அன்று காலை 11:45 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் அக்டோபர் 25 ஆம் தேதி நள்ளிரவு 12:31 வரை நீடிக்கும்.
புஷ்ய நட்சத்திரத்தில் தங்க நகைகள், வைரம், நிலம், கட்டிடம், வாகனம், ஃப்ரிட்ஜ், டி.வி., வாஷிங் மிஷின் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கலாம். அன்றைய தினத்தில் நீங்கள் இந்த பொருட்களை வாங்குவதால் அவை நிரந்தரமாக இருக்கும். அவை எந்த வழியிலும் அழியாத. என ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்.