உலகில் ஏராளமான தீர்க்கதரசிகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் அரியப்பட்டவராக பாபா வாங்கா இருக்கிறார்.
இவர் பல்கேரியாவை பிறப்பிடமாக கொண்டவர், தன்னுடைய 12 வயதில் பார்வையை இழந்த பாபா வாங்கா எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்கும் ஆற்றல் கிடைத்தது.
இதனால் பாபா வாங்கா ஒவ்வொரு ஆண்டும் நடக்கவிருக்கும் சம்பவங்களை கணித்து குறிப்புக்களாக எழுதி வைத்துள்ளார். இதுவரையில் அவர் கணித்த பல விடயங்கள் சரியாக நடந்து முடிந்துள்ளன.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்னரும் பாபா வாங்காவின் கணிப்புக்கள் வெளியிடப்படும்.
இதில் நல்ல மற்றும் கெட்ட விடயங்களுக்கும் கூறப்பட்டிருக்கும். மற்றவர்கள் போல் அல்லாமல் நடப்பதை கச்சிதமான கணித்திருப்பார் பாபா வாங்கா. இதனால் மக்கள் பாபாவாங்காவின் கணிப்புக்கள் பற்றி தெரிந்து கொள்ள பெரிதும் விருப்பம் காட்டுவார்கள்.
அந்த வகையில், இன்னும் 2 மாதங்களில் பிறக்கவிருக்கும் 2025 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்புகள் என்ன என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் என்ன நடக்கலாம்?
1. 2025 ஆம் ஆண்டில் உலகம் முடிவு ஆரம்பமாகும், இந்த அழிவு 5079 ஆம் ஆண்டு வரை இருக்கலாம் என கணித்துள்ளார். அதன் பின்னர் இந்த பூமியில் மனித இனமே இருக்காது என அவரது குறப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2. பாபா வாங்காவின் கூற்றின் படி, 2025 ஆம் ஆண்டு முதல் மனித குலத்தின் வீழ்ச்சி அதிகரிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும். அதுவும் ஐரோப்பாவில் ஒரு பேரழிவை உண்டாகும் வகையில் மோதல்கள் நடக்கும்.
3. மக்களுக்கிடையில் ஏற்படும் மோதலால் 2025 ஆம் ஆண்டில் மக்களின் தொகையில் மாற்றங்கள் ஏற்படும். அதன் பின்னர், எதிர்வரும் 2028 ஆம் ஆண்டில் மனிதர்கள் புதிய வளங்களை தேடி வீனஸை அடைவார்கள். அதே போன்று எதிர்வரும் 2033 ஆம் ஆண்டு துருவ பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார்.
4. எதிர்வரும் 2076 ஆம் ஆண்டில் கம்யூனிசம் திரும்பவும் வர வாய்ப்பு உள்ளது. 2130 ஆம் ஆண்டில் மக்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வார்கள். அதே சமயம் 2170-ல் காலநிலை மாற்றம் ஏற்பட்டு, பூமியில் ஏராளமான அழிவுகள் ஏற்படும். இதனால் பூமியில் வறட்சி ஏற்பட்டு மனித வாழ்க்கையில் மோசமான விளைவுகள் ஏற்படும்.
5. 3005-ல் செவ்வாய் கிரகத்துடன் மக்கள் போர் கொள்வார்கள். இதனால் 3797-ல் மனிதன் பூமியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும். மனிதர்கள் ஆளும் பூமி அதன் பின்னர் 5079ஆம் ஆண்டில் முற்றாக அழிந்து விடும் என மோசமான விடயங்கள் பற்றி பாபா வாங்கா கூறியுள்ளார்.