ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் பிறந்த ராசி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவர்கள் பிறந்த நட்சத்திரமும் அவசியம்.
ஏனெனின் சிலருக்கு ராசிகள் ஆதரவாக இருந்தாலும் அவர்கள் பிறந்த நட்சத்திரம் பாதகமாக இருக்கலாம். இதனால் அவர்களுக்கு விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
ராசி, நட்சத்திரம் இவை இரண்டும் சாதகமாக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வந்துக் கொண்டே இருக்கும் என பலரும் கூறுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் நட்சத்திரங்கள் மொத்தமாக 27 உள்ளன, இது 27 கிரகங்களின் பிரிவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில், ஒருவர் பிறந்த நேரத்தில் சந்திரன் எங்கிருந்தது என்பதனை அடிப்படையாக வைத்தே அவர்களின் நட்சத்திரம் தீர்மானிக்கப்படுகின்றது. இப்படி கணிக்கப்படும் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட ஆளுமை உள்ளது.
அப்படியாயின் பிறந்தது முதல் தலைமைத்துவ பண்புகளால் ஆளப்படும் நட்சத்திரங்கள் என்னென்ன என்பதனையும் அவர்களுக்கு வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனையும் தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
1. அஸ்வினி நட்சத்திரம்
27 நட்சத்திரத்தில் அஸ்வினி நட்சத்திரம் முதன்மையானதாக பார்க்கப்படுகின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்களாம். இவர்கள் எங்கு சென்றாலும் சில விஷயங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்வார்களாம்.
கோபம், ஆவேசம் மற்றும் உயர்ந்த நோக்கம் கொண்டவர்களாக நபர்களாக இருக்கும் இவர்கள் சிறந்த தலைவராக இருக்க விரும்புவார்களாம். முயற்சித்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிடம் கூறுகின்றது.
2. பரணி நட்சத்திரம்
அதிர்ஷ்டத்தில் பரணி நட்சத்திரம் சக்திவாய்ந்த இரண்டாவது நட்சத்திரமாக பார்க்கப்படுகின்றது. இவர்கள் அன்பின் மறுஉருவமாக இருப்பார்கள். சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிறைய அன்பு இருக்கும்.
இந்த நட்சத்திரத்தில் அநேகமாக பெண்கள் தான் பிறப்பார்கள். சிறந்த தாயாகவும், அம்மாவாகவும் இருப்பார்கள். அத்துடன் இவர்களை அன்பின் அடையாளமாக சிலர் பார்க்கிறார்கள்.
3. பூச நட்சத்திரம்
பூச நட்சத்திரம் “பூ மற்றும் அம்பு” சின்னமாக பார்க்கப்படுகின்றது. இவர்கள் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார்கள். அத்துடன் புத்திசாலிகளாக இருக்கும் இவர்கள் எப்போதும் லட்சியத்தை நோக்கிய பயணத்துடன் இருப்பார்கள்.
நீர் அறிகுறியாக இருப்பதால், இவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு மற்றவர்களை நம்பும் நபராக இருப்பார்கள். இதனை காரணமாக வைத்து வாழ்க்கையில் சில பின்னடைவுகளை சந்திப்பார்கள். தோல்வியை கண்டு அஞ்சாமல் அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கும் குணம் இவர்களிடம் இருக்கும்.