ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களளின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில் ராசியில் பிறந்த பெண்கள் அனைத்து ராசியில் பிறந்த ஆண்களின் மனங்களையும் நெடிப்பொழுதில் கொள்ளை கொள்ளும் குணங்களை கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அப்படி ஆண்களை இயல்பாகவே காந்தம் போல் கவரும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே மிகவும் இரக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது இவர்களின் பேச்சிலும் செயல்களிலும் வெளிப்படும்.
இந்த ராசி பெண்களின் தோற்றடும் மிகவும் வசீகர தன்மை கொண்டதாக இருக்கும்.இவர்களை பார்க்கும் ஆண்களை இவர்களின் அழகு அல்லது நல்ல குணம் என ஏதோ ஒன்று இனம் புரியாத ஈர்ப்பை ஏற்படுத்தும்.
இந்த ராசி பெண்களிடம் மற்றவர்களை பற்றி புறம் பேசும் இயல்ப்பு துளியளவும் இருக்காது. இதன் காரணமாகவே பெரும்பாலான ஆண்கள் இந்த ராசி பெண்களால் எளிதில் ஈர்க்கப்படுகின்றார்கள்.
துலாம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது மிகவும் கவர்ச்சிகரமாக உடல் அடைப்பு மற்றும் வசீகரமான முக அமைப்புடன் முதல் பார்வையிலேயே ஆண்களை வசியப்படுத்தும் பார்வையை கொண்டிருப்பார்கள்.
இந்த ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் துணைக்கு சிறந்த காதலியாகவும் மனைவியாகவும் இருப்பதுடன் சிறந்த நன்பியாகவும் இருப்பார்கள்.
இவர்கள் இயல்பிலேயே மிகவும் நேர்மையும் உண்மையும் கொண்டவர்களாக இருப்பதால், இவர்களின் இந்த குணம் எந்த ராசி ஆணையும் ஈர்க்கும்.
மகரம்
மகர ராசியில் பிறந்த பெண்கள் அளவிட முடியாத வகையில் வசீகர தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் பேசுவதில் மிகவும் திறமையானவர்களாக இருப்பார்கள். உலக நடப்புகள் பற்றிய அறிவு இவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.
இவர்களின் சுதந்திரமான செயற்பாடு மற்றும் அவர்களின் அழகு ஆண்களை முதல் பார்வையிலே மயக்கும் தன்மையை கொண்டிருக்கும்.