ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில் எதிர்வரும் அக்டோபர் 29 ஆம் திகதி அறிவு மற்றும் ஞானத்தின் அடையாளமாக திகழும் புதன் பகவான் விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றார்.
புதனின் இந்த சஞ்சாரமானது அனைத்து ராசியினரின் வாழ்விலும் குறிப்பிட்டளவு மாற்றத்தை ஏற்படுத்துகின்ற போதிலும் குறிப்பிட்ட சில ராசியினரின் வாழ்வில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றது.
அப்படி புதன் பெயர்ச்சியால் இரட்டிப்பு பணத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெற்று ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியானது வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஒரு மிகப்பெரும் திருப்பு முனையாக அமைகின்றது.
இவர்களின் வாழ்வில் இதுவரையில் இருந்துவந்த துன்பங்கள் விலகி நிம்மதியானதும் மகிழ்ச்சியானதுமான வாழ்க்கை அமையும்.
தொழில் ரீதியில் எதிர்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும். பல்வேறு வழிகளிலும் வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இவர்களின் வாழ்வில் இது பொற்காலமாக அமையும்.
துலாம்
புதனின் இந்த பெயர்ச்சியானது துலாம் ராசியினருக்கு தொழில் ரீதியிலும் வியாபார விடயங்களிலும் பல்வேறு வகையிலும் நன்மைகளை வழங்கப்போகின்றது.
தொழிலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. தொழில் தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.
திருமண உறவில் இருந்துவந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் ஒற்றுமை அதிகதிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியானது பல்வேறு வகையிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது.
பலர் உங்களுக்கு தேடிவந்து உதவி செய்யும் வாய்ப்பு அமையும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்சினைகள் இப்போது மிகவும் எளிதாக தீர்க்கப்படும்.
நிதி ரீதியில் நீங்களே எதிர்ப்பார்காத அளவுக்கு மாபெரும் வளர்ச்சி உண்டாகும். செல்வ செழிப்புடன் ராஜ வாழ்க்கை வாழப்போகும் காலகட்டமாக இரு அமையும்.