Loading...
உலகின் பெரும்பாலான நாடுகளைப் போன்றே இலங்கையும் நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி முன்னேற வேண்டிய காலம் உருவாகியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை விட்டுச் செல்லும் மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த உள்ளது.
Loading...
தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்க இது துணை புரியும். பாடசாலைகளை விட்டு விலகிச்செல்லும் மாணவர்கள் புதிய தொழில்நுட்ப முறைகளின் மூலம் சுயதொழில் வாய்ப்புக்களில் ஈடுபடும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
கேகாலை சென்.மேரிஸ் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது பிரதமர் இந்த கருத்தினை வெளியிட்டார்.
Loading...