நமக்கு வரக்கூடிய கனவுகள் பல்வேறு பலன்கள் தரக்கூடியதாக அமைகின்றன.நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
சொப்ன சாஸ்திரத்தின்படி நாம் காணக்கூடிய கனவுக்கு சில பலன்கள் உண்டு. அதே போல பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு. நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தின் போது வரக்கூடிய கனவு நமக்கு பல விதத்தில் பலன்கள் அளிக்கும்.
அந்த வகையில் நமக்கு தீராத அதிஷ்டம் தரக்கூடிய சில கனவுகள் பற்றி சொப்பன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சொப்பன சாஸ்திரம்
கனவுகள் பொதுவாக இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும் இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும் மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு
மாதங்களிலும் விடியும் வேளையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்துநாள் அல்லது ஒரு மாதத்துக்குள்ளும் பலிக்கும் என சொப்பன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
கனவில் அரச பதவி மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படுவதாகக் கனவு கண்டால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உண்டாகும். இந்த கனவை மணமாகாத இளம்பெண் கண்டால் அவளை மணம் முடிக்க வரப்போகும் ஆண் அவள் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதியுடன் இருப்பான் என்று கூறப்படுகின்றது.
இது தவிர அரச குடும்பத்தில் இருப்பவர்களுடன் பழகுவது போல கனவு வந்தால் நண்பர்கள் மூலமாக பொருள் உதவி கிடைக்கும் என கூறப்படுகின்றது. தேவலோகப் பெண்களை ஆண்கள் கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.
கர்ப்புடைய ஆண்கள் திருமணமாகாத மகளீரை கனவில் கண்டால், விரைவில் திருமணம் நிகழும் எனப்படுகின்றது. திருமணமாகிய பெண்ணை கனவில் கண்டால், பொருள் வரவு உண்டாகப்போகின்றது என அர்த்தம்.
தனக்கு அபாயமும், தொல்லைகளும் ஏற்படுவதாக கனவு கண்டால் இதன் பலன் நேர்மாறாக நிகழும். கனவு கண்டவரின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக நிம்மதியுடையதாக அமையும். கல்வி போதிக்கும் ஆசிரியப் பெருமக்களில் ஒருவரை கனவில் கண்டால் வாழ்க்கை வளங்கள் அமோகமாகப் பெருகிடும்.
பொருள் வரவும் மிகுதியாகும்.கோவிலைக் கனவில் காண்பது நன்மையான பலன்களைத் தரும். இதனால் செய்யும் வியாபாரம் மற்றும் நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். உங்களை அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகுக்கும்.
நீங்கள் இந்த கனவு கண்டால் புனித யாத்திரைகளையும் மேற்கொள்ள நேரிடலாம். கனவில் ஆலமரத்தைக் கண்டால், செய்கின்ற தொழில் மேலும் அபிவிருத்தி அடையும். பொருள் வரவும் சுற்றத்தார் சூழலும் உண்டாகும்.
தன்னைவிட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் தன்னை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வதாக கனவு கண்டால், தொழிலில் உயர்வும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் வந்தடையும்.