சாரதா பௌர்ணமி அன்று உருவாகும் சுப யோகத்தால் குறிப்பிட்ட சிலருக்கு செல்வம், அதிர்ஷ்டம் கிடைக்கப்போவதாக ஜோதிடம் கூறுகின்றது.
நிதி விஷயங்களில் அதிர்ஷ்டம் தரும் பலன்கள் கிடைத்தால் மன உறுதி கிடைக்கும். அதிலும், தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் அதிகரிப்பு ஏற்பட்டால் மனதில் மகிழ்ச்சி கிடைக்கும்.
வழமையாக சாரதா பௌர்ணமி அன்று அற்புதமான மற்றும் மங்களகரமான கிரகங்களின் சேர்க்கை ஏற்படும் எனக் கூறப்படுகின்றது.
அந்த தினத்தில் ரவியோகம், சர்வார்த்த சித்தி யோகம், சச ராஜயோகம் ஏற்படும். சுப கிரகங்களான வியாழன், சூரியன் இரண்டும் ஒன்பதாம் மற்றும் ஐந்தாம் யோகம், சந்திரன் மற்றும் செவ்வாய் கேந்திர யோகம் இணையும். இந்த சேர்க்கையால் துருவ யோகம் உருவாகவுள்ளது.
துருவ யோகம் கொண்ட ராசிகள் ஒரு செயலை செய்தால் அதில் நிரந்தரமான பலன்களை பெறுவார்கள். அதே சமயம் அவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வாகனம் வாங்கினால் இன்னும் அவர்களுக்கு மங்களம் உண்டாகும்.
அந்த வகையில், சாரதா பௌர்ணமி அன்று அளவற்ற செல்வம் பெறப்போகும் 4 ராசிகள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
1. மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் சாரதா பௌர்ணமி அன்று கிரகங்களின் சேர்க்கையால் நிறைய பலன்களை பெறுவார்கள்.
நீண்ட நாட்களான முதலீடு செய்த தொகையிலிருந்து பாரிய வருமானம் கிடைக்கும்.
மகிழ்ச்சிக்கான வழிகள் உங்கள் கண்முன்னர் தெரியும்.
ஜவுளி மற்றும் நகை வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இன்றைய தினம் வருமானம் அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
லட்சுமி தேவியின் ஆசியுடன், இனிவரும் நாட்கள் மிகவும் சிறப்பாக அமையும்.
2. கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் விஷேசமான செய்திகள் வந்து சேரும்.
சாரதா பௌர்ணமி அன்று லட்சுமியின் அருள் இந்த ராசியினருக்கு முழுமையாக கிடைக்கும்.
இன்றைய தினம் உண்டாகும் சுப யோகத்தால், செல்வம், அதிர்ஷ்டம் ஆகிய இரண்டும் கிடைக்கும்.
நிதி விஷயங்களில் அதிர்ஷ்டம் பலன் தரும் வழிகள் அதிகமாக இருக்கும்.
வியாபாரத்தில் வருமானம் அதிகரிப்பதால் மனம் மகிழ்ச்சி உண்டாகும்.
புனித யாத்திரைகள் செல்லலாம்.
பொருள் வசதிகள் அதிகரிப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.