வீட்டில் கற்பூரம் மற்றும் கிராம்பு இவற்றினை ஒன்றாக எரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பணம்
பொதுவாக பணம் என்றால் அனைவருக்கும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை தானாகவே வந்துவிடும். அதிலும் செல்ல செழிப்புடன் வாழ வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு.
நமது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு மட்டுமின்றி, மன நிறைவையும், அமைதியையும் அளிக்கின்றது.
அவரவர்கள் செய்யும் வேலையைப் பொறுத்து பணத்தை சம்பாதித்து வருகின்றனர். ஆனால் இத்தகைய சூழ்நிலையில், பணம் மற்றும் செல்வம் வீட்டில் நிலைத்திருக்க வேண்டுமெனில் நேரமறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டும்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என சிறப்பு முக்கியத்துவம் உண்டு. எனவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பணம் மற்றும் செல்வம் அதிகரிக்கவும், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கவும் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் கிராம்பு மற்றும் கற்பூரத்தை ஒன்றாக எரிப்பது.
கிராம்பு மற்றும் கற்பூரம் இவை இரண்டும் நல்ல மணமுடையதுடன், இவற்றினை ஒன்றாக எரிக்கும் போது அதிலிருந்து வரும் வாசனை மற்றும் புகை வீடு முழுவதும் நிரம்பி இருக்கும்.
கிடைக்கும் நன்மைகள்
கற்பூரம் மற்றும் கிராம்பை வீட்டில் ஒன்றாக எரிப்பதால், செல்வ செழிப்பு அதிகரிப்பதுடன், சிக்கியிருக்கும் பணமும் உடனே வந்து சேரும். பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வழிகள் சிரமமின்றி உடனே கிடைக்கும்.
வீட்டில் உள்ளவர்கள் மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றிலிருந்து விடுபடுவதுடன், எல்லா விடயங்களிலும் கவனத்துடன் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
இரவு நேரத்தில் எதிர்மறை ஆற்றல் வீட்டில் வர வாய்ப்பு அதிகம் உள்ளதுடன், இந்த சூழ்நிலையில் இரவு நேரத்தில் இவற்றினை சேர்த்து எரிப்பதால் எதிர்மறை ஆற்றல் விலகி ஓடி, நேர்மறை ஆற்றல் நிரம்பி வழியும்.
வீட்டில் செல்வம் சேர்வதற்கான வாய்ப்பும், காரியங்கள் தடையின்றி செய்து முடித்து வெற்றியையும் இதனால் காண்பீர்கள்.
வீட்டில் அமைதி மற்றும் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், குடும்பத்தில் அன்பும் பாசமும் நிலைத்திருக்கும்.
எப்படி எரிக்க வேண்டும்?
பணப்பிரச்சனை நீங்க வேண்டும் என்றால், சில்வர் கிண்ணம் ஒன்றில் கற்பூரத்தையும், கிராம்பையும் ஒன்றாக வைத்து இரவு தூக்க செல்லும் முன்பு எரிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து பண பிரச்சனை நீங்கும்.
திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்றால், 36 கிராம்புடன் 6 கற்பூரத்தை வைத்து எரிக்க வேண்டுமாம்.
வீட்டில் செல்வம் அதிகரிக்கவும், லட்சுமி தேவியின் பூரண அருள் கிடைக்கவும் கற்பூரம் மற்றும் கிராம்பை ஒன்றாக சேர்த்து வீட்டு வாசலில் வைத்து எரித்து விட வேண்டும்.
வீட்டில் எதிர்மறை ஆற்றலை நீக்குவதற்கு, தினமும் காலை எழுந்ததும் கற்பூரம் மற்றும் கிராம்பை சேர்த்து எரிக்கவும்