தாய்லாந்தின் பெங்கொக் நகரில் ஆமை ஒன்றின் வயிற்றில் இருந்து 900க்கும் அதிகமான அளவு சில்லறைகள் நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிஷ்டத்திற்காக இந்த ஆமை வாழ்ந்த நீரில் சில்லறை வீசப்பட்டுள்ள நிலையில் அந்த ஆமை அதனை விழுங்கியுள்ளதென விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆமையின் வயிற்றில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சில்லறை காசின் நிறை கிட்டத்தட்ட 50 கிலோ என குறிப்பிடப்படுகின்றது.
சத்திரசிகிச்சையின் பின்னர் இந்த உயிரினம் சிறப்பான உடல் நிலையில் உள்ளதாக தாய்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஆமை ஒன்றுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் 7 மணித்தியாலங்கள் இச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது