பொதுவாகவே இவ்வுலகில் வாழ்வதற்கு கல்வி மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
மன்னராக இருந்தால் கூட அவனின் நாட்டை விட்டு வெளியில் சென்றால் இவனுக்கு மதிப்பிருக்காது. ஆனால் கல்வியில் சிறந்தவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு. கல்வி கற்றோர் எங்கும் மதிக்கப்படுவார்கள்.
நம்மிடமிருந்து எல்லா செல்வங்களும் அழிந்தாலும் கூட கல்வி செல்வம் ஒன்று மட்டும் இருந்தாலே போதும் இழந்த அனைத்தையும் மீண்டும் திரும்பபெற முடியும்.அத்தகைய சிறப்பு மிக்க கல்வியில் அனைராலும் சிறந்து விளங்க இயலாது.
கல்வி என்பது மிகப்பெரும் வரம். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியினர் பிறப்பிலேயே கல்வி துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்கள் போல் திகழ்வார்களாம்.
அப்படி கல்வியில் சாம்பவானாக திகழ்ந்து பல்வேறு சாதனைகளை படைக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு உலகத்து அறிவு இயற்கையிலேயே சற்று அதிகமாக இருக்கும்.
இவர்கள் ஆழ்மனம் எப்பொழுதும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தை கொண்டிருக்கும். இவர்கள் ஏன் எதற்கு என்ற கேள்விகளுக்கு எல்லா விடயங்களிலும் விடை தேடிக்கொண்டே இருப்பார்கள்.
இவர்களுக்கு கல்வி கற்பதிலும் வித்தியாசமாக விடயங்களை அறிந்துக்கொள்வதிலும் அலாதி இன்பம் இருக்கும். இந்த ஆர்வத்தால் இவர்கள் கல்வியில் பெரியளவில் சாதிப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக திகழும் புதன் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.
அதனால் இவர்களுக்கு இயல்பாகவே தெளிந்த சிந்தனை மற்றும் நுண்ணறிவு அதிகமாக இருக்கும். இவர்கள் எதிர்காலத்தில் கல்வி துறையில் மிகப்பெரும் சாதனையாளர்களாக மாறுவார்கள்.
இவர்களுக்கு வாசிப்பு திறன் அதிகமாக இருக்கும் அனைத்து விடயங்களையும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வியில் அதிக நாட்டத்தை கொண்டிருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறப்பெடுத்தவர்களும் புதனின் ஆதிக்கத்தில் பிறந்வர்கள் என்பதால் அனைத்து விடயங்களையும் அறிந்துக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.
இவர்களுக்குள் தோன்றும் ஏராளம் கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியில் இருப்பதால் கவ்வி கற்பதில் இவர்கள் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். இதன் விளைவாக இவர்கள் சாதனையாளர்களாகும் வாய்ப்பை பெறுகின்றார்கள்.