பொதுவாகவே திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றது.
காரணம் இதற்கு பின்னரான வாழ்க்கையை நாம் தேர்தெடுக்கும் வாழ்க்கை துணையுடன் தான் கடக்க வேண்டியுள்ளது.
இதனால் வாழ்கை துணையாக அமைபவர்கள் நமக்கு எல்லா வகையிலும் பொருந்தக்கூடியர்களாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அப்படிப்பட்ட வாழ்க்கை பலருக்கும் அமைவது கிடையாது.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களுக்கு எல்லா வகையிலும் பொருத்தமாக இருக்கும் வாழ்க்கை துணையை தாங்களே தெரிவு செய்யும் வாய்ப்பை பெறுவார்களாம்.
அப்படி சுதந்திரமாக திருமண வாழ்க்கையை முடிவு செய்யும் வரம் பெற்ற ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், காதல் விடயங்களில் இவர்களுக்கு சற்று ஆர்வம் அதிகமாகவே இருக்கும்.
இவர்கள் காதல் மற்றும் திருமணத்தின் மீது அதிக மதிப்பும் மரியாதையம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் துணையை தெரிவு செய்யும் பொறுப்பை மிகவும் நேர்த்தியான முறையில் செய்பவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் காதல் விடயத்தில் அவசரபட மாட்டார்கள். இருப்பினும் காதலில் இறங்கிவிட்டால் மிகவும் உண்மையாகவும் துணையிடம் நேர்மையாகவும் இருப்பார்கள்.
கடகம்
கடக ராசியினர் உறவுகள் மீது அதிக ஈடுப்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் மற்றும் மரியாதையை எப்போதும் கொடுப்பார்கள்.
மிகவும் அதிகமாக உணர்ச்சிகளுக்கு கட்டுப்படும் தன்மை கொண்ட இவர்கள் தங்களின் வாழ்க்கை துணையை தெரிவு செய்யும் உரிமையை மாத்திரம் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
இவர்களின் குணத்தை நன்றாக புரிந்து நடந்துக்கொள்ளும் ஒருவரை தான் இவர்கள் வாழ்க்கை துணையாக தெரிவு செய்ய விரும்புவார்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் காதல் மற்றும் திருமணம் என்று வரும்போது மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்களின் முழு விருப்பத்தின் பேரில் மட்டுமே இவர்களின் திருமணம் நிகழும்.
இவர்கள் தங்களுக்கு எல்லா வகையிலும் பொருத்தமான வாழ்கை துணையை தான் நிச்சயம் தெரிவு செய்வார்கள். இதனால் இவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.