கனவுகள் எப்போதும் அர்த்தங்களுடன் தான் வரும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
கனவுகள் பெரும்பாலும் நமது உள் உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் அனுபவங்களை பிரதிபலிக்கும் விதமாகவே தோன்றும்.
கனவுகள் தோன்றும் பொழுது அது ராசிகளிலும் தாக்கம் செலுத்துகின்றதாக சொல்லப்படுகின்றது.
இதன்படி, மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஒரு சில விசித்திரமான கனவுகள் வரும். அதில் முக்கியமானது என்னவென்றால் இவர்களுக்கு வரும் கனவுகளில் அர்த்தங்கள் நிறைந்திருக்கும்.
அந்த வகையில், மேஷ ராசியினர் சுத்தமான மீன்களைக் கனவில் கண்டால் என்னென்ன அர்த்தங்கள் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கனவின் மீன்கள் வந்தால் என்ன பலன்
1. புதிய மீன்களை கனவில் கண்டால் நீங்கள் பணக்காரர்கள் ஆவதற்கான முன் அறிகுறியாகும். உங்களின் வாழ்க்கை மாறப்போவதை இது குறிக்கின்றது. சாஸ்த்திரங்களின் மீன்கள் நீண்ட காலமாக செல்வமாகவும், அதிர்ஷ்டமாகவும் பார்க்கப்படுகின்றது.
2. கையில் மீன்களை பிடிப்பது போன்று கனவு வந்தால் அது நல்ல சகுனமாக பார்க்கப்படுகின்றது. பதவி உயர்வு, நிதி இழப்பு அல்லது பிற பொருள் ஆதாயங்கள் கிடைக்கப்போகின்றது எனப் பொருட்ப்படுகின்றது.
3. கனவில் புதிய சுத்தமான மீன் வருவது பெரும்பாலும் செல்வ செழிப்பை குறிக்கின்றது.கடின உழைப்பு பிறகு வரும் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.
4. மீன் நீர்வாழ் உயிரின் என்பதால் உங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மீனின் தோற்றம் என்பது உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கின்றது. கடந்தகால போராட்டங்கள் அல்லது கெட்ட விஷயங்கள் உங்களை பாதிக்காது. நேர்மறையான மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் பார்ப்பீர்கள்.
5. எமது பழங்கால கலாச்சாரங்களில் மீன் என்பது கருவுறுதலின் அடையாளமாகவும் பார்க்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர் இப்படியான கனவு வந்தால் நீங்கள் கருவுறப் போவதை குறிக்கும்.