நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். வாகனமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். கையில் காசு, பணப்புழக்கம் அதிகரிக்கும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வீடு வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும் நாள். விருந்தினர் வருகை உண்டு. பயணத்தில் பால்ய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். உற்றார், உறவினர்கள் வழியில் சிறு விரயமுண்டு.
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். திடீர் என எடுத்த முடிவால் சிலரது எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் வந்து சேரலாம்.
மகிழ்ச்சி கூடும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு கிட்டும்.
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி கூடும் நாள். நேற்றுப் பாதியில் நின்ற பணி இன்று மீதியும் முடியும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணத்தால் பலன் உண்டு.
ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தலைமைப் பதவிகள் தேடி வருவதற்கான அறிகுறிகள் தென்படும் நாள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். கொடுக்கல்– வாங்கல்கள் ஒழுங்காகும்.
அலுவலகப் பிரச்சினை அகலும் நாள். தலைமைப் பதவிகள் தேடிவருவதற்£கன அறிகுறிகள் தென்படும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாணப் பேச்சுக்கள் முடிவாகும்.
காரியங்கள் கைகூடும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு குறையும். தாய்வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.