பொதுவாகவே அனைவரின் வாழ்விலும் பணம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்லுமே தவிர ஒருபோதும் குறையாது.
இவ்வுலகில் எமை செய்ய வேண்டும் என்றாலும் பணம் இருந்தால் தான் முடியும் என்ற நிலை பணம் உருவாக்கப்பட்ட போதே உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.
அந்தளவுக்கு பணம் உலகெங்கிலும் வியாபித்து இருக்கின்றது.ஆனால் ஜோதிட சாஸ்த்தின் பிரகாரம் குறிபிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் இறுதிவரை அதிக செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
அப்படி வாழ்கை முழுவதும் பணத்தில் புரளும் யோகம் பெற்றவர்கள் எந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பிலேயே வசீக தோற்றமும் மற்றவர்களை முதல் பார்வையிலேயே ஈர்க்கும் அளவுக்கு காந்தம் போன்ற பார்வையும் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் அனைத்து விதமான உலகத்து இன்பங்களையும் பெறுவதற்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
குறிப்பாக இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கணவரின் வீட்டில் மகாராணியை போன்ற வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்களை தேடி பணடும் புகழும் ஏதோ ஒரு வகையில் வந்துக்கொண்டே இருக்கும்.
கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரியபகவானால் ஆளப்படுகின்றார்கள். இதனால் இவர்கள் எங்கு சென்றாலும் முன்னிலை வகிக்கும் தன்மையை கொண்டிருப்பார்கள்.
அவர்களின் ராசி அதிபதி சுக்கிரன் என்பதால் இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் முழுமையான ஆசீர்வாதம் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
இவர்கள் வாழ்வில் பணத்துக்கும் ஏனைய செல்வங்களுக்கு ஒருபோதும் குறைவே ஏற்படாது. இவர்கள் ராஜ வாழ்க்கை வாழும் யோகம் பெற்றவர்கள்.
மிருகசீரிஷம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தின் அதிபதியாக செவ்வாய் இருக்கின்ற போதிலும் ராசியின் அதிபதியாக சுக்கிரன் திகழ்வதால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆடம்பரமாக வாழும் யோகத்தை பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் வாழ்வில் பணக்கஷ்டம் ஏற்படுவது மிக மிக அரிது. இவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கே பிறப்பெடுத்தவர்கள் போல் வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்கள்.